பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 அகத்திணைக் கொள்கைகள் காட்சி-3 காலம் : மாலை. இடம் : ஏறு தழுவும் களம், உறுப்பினர் : ஆயர்மகள், அவளுடைய தோழி. நிகழ்ச்சி : முல்லை நிலத்தில் ஆயர் மகள் தன் களவு ஒழுக்கத்தை அறத்தொடு நிற்றல்மூலம் தோழிக்குப் புலப்படுத்துகின் றாள். தோழி அவளுக்குத் தமர் வரைவுடன்பட்டமையைக் கூறுகின்றாள்." ஆயர் மகள் : ஏடி, நம் சுற்றத்தார் ஏறு தழுவலே சிறந்த தென்று தொழுவிலே ஏறுகளைப் புகவிட்டனர். ஏறுதழுவின ஒருவன் சென்னியிற் கிடந்த முல்லைப்பூக் கண்ணியை அவ் வேறு, கோட்டிற்கொண்டு துள்ளிக் குதித்தது. இந்நிலை யில் கண்ணி என் தலைமயிரிலுள்ளே வந்து வீழ்ந்தது. இழந்த பொருளை மீட்டும் பெற்றாரைப்போல் யான் அக் கண்ணியை எடுத்து என் கூந்தலில் முடித்துக் கொண்டேன். இதனை என் அன்னை அறிந்திருப்பாளோ? தோழி : அக்கண்ணி அவனுடையது. அவன் வரைந்து கோடல் தாழாதவனன்றே! அன்னை கேட்டால் அதற்கு யாம் செயத் தக்க தீர்வு யாது? ஒன்றும் வேண்டா. வாளாகிட. ஆ.ம : தோழி, நீ பூ முடித்தால் மயிர் நாறும் என்பதை யான் அறியாதவள். அயலான் ஒருவன் கண்ணியைத் தான் அவன் மீது கொண்ட மயலால் சூட்டிக் கொண்டாள் எனத் தாய் அறிந்தால் என்னை வெகுளாமல் யாதுதான் செய்வாள்? தோழி : இனி, எல்லாத் தவறுகளும் நீங்கிப் போயின. ஆ.ம : (வியந்து) அத்தவறுகள் எங்ஙனம் நீங்கின? தோழி : அவனும் ஆயர் மகன். நீயும் ஆயர் மகள். அவன் உன்னை விரும்பினான். நீயும் அவனை விரும்பினாய். இதனால் அன்னை நின்னை நோதக்கது யாதும் இல்லை. ஆ.ம : அன்னையின் கருத்து இதுவென நின் நெஞ்சு அறியு மாயின் அவள் என்னை நோகாள் என்பது உறுதியாமோ? 5. டிெ-7.