பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தினை நாடகக் காட்சிகள் - 3.49 மொக்குளையும் ஒத்துள்ள பெருத்த நின்னுடைய இளைய முலை கள் நின்னைக் கண்டார் உயிரை வாங்கும் என்னும் நிலையை நீ அறிவாயோ? அறியாயோ?” என்று கேட்கின்றான். அவள் பேசாது வாளா நிற்கின்றாள்; அவ்விடத்தை விட்டு அகல முயல்கின்றாள். அவ்வமயம் அவன், 'மறுமாற்றம் மொழி யாது செல்கின்றவளே, யான் கூறுவதைக் கேட்பாயாக நீயும் குற்றமுடையை அல்லை; நின்னைப் புறத்தே புறப்படச் செய்யும் நுமரும் தவறிலர். மதம் பிடித்த யானையைப் பறையறைந்த பின் வெளிச் செல்ல விடுத்தல்போலப் பறை சாற்றியபின் உன்னை வெளியே வரவிடக் செய்யாத அரசனே தவறுடையான் என முடிக்கின்றான். காட்சியும் முற்றுப் பெறுகின்றது." இதில் தருக்கிச் சொல்லிச் சொல்லெதிர் பெறான்.' இன் புறுவதைக் கண்டு மகிழலாம். கைக்கிளைக் குறிப்பாக வரும் நாடகக் காட்சி நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்ற தன்றோ? - கற்றறிந்தார் ஏத்தும் கலிப் பாக்களைப் பொருளுணர்வுடன் பயில்வோர் தம் உள்ளமாகிய அரங்கில் அழகு மிக்க அன்பு பெருகிய வானுலகத்துத் தெய்வக் கூத்தர்களே திறம்பட நடிக் கின்ற ஒப்பற்ற நாடகங்களைத் தம்முள்ளே தமது அகக் கண்ணால் கண்டுகளிக்கும் பேற்றினைப் பெறுவார்கள். இங்ங்ணம் பாடல் களைப் பயின்று துய்ப்பதற்கு உள்ளத் தூய்மையும் சுவைக்கும் பழக்கமும் வேண்டும். உலக இயல்பிற்குப் படம்போல் அமைத்துக் காட்டும் பாடல்கள் சுவைகளை உணர்ந்து இன்புறுவதற்காகவே பாடப்பெற்றுள்ளன. கருவிலே திருவும் கல்விபெறுங் காலத்தில் நல்ல பயிற்சியும் பெறுவோர் இத்தகைய பாடல்களை நன்கு துய்க்கலாம். - அகப்பாடல்கள் யாவும் கூற்று வடிவிலேயே அமைந்துள்ளன. நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகைப் பாடல் கள் அனைத்தும் நாடகக் காட்சிகளே. அனைத்தையும் நாடகக் காட்சி வடிவில் அமைக்கலாம். அகத்தில் ஒன்று காட்டுவேன். 8. குறிஞ்சிக் கலி-20 9. அகத்திணை-53 அ-29