பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை நாடகக் காட்சிகள் 451 தலைவன் : ஏடி, அம்மலையினை நோக்கவே எனக்குப் பேரச்சம் உண்டாகின்றது. இருளினுள் இருள்புடைத்தாற் போலத் தோன்றுகின்றது, விண்ணையளாவி நிற்கும் அம் மலையின் தோற்றமும் அதன் அருவி முழக்கமும் குலை நடுங்கும் அளவுக்கு அச்சத்தை விளைவிக்கின்றன. தோழி : தேவி, அம்மலையிலுள்ள குகைகளை நீ கண்ணுற்றா யாகில்... தலைவன் : கண்ணுற்றால் என் உயிரே போய்விடும். ஏன் நேற்றிரவு வானம், பேரிருள் கிழியும்படி பளிச், பளிச் என்று மின்னிக் கொண்டிருந்தபொழுது அக்குகைகள் என் கண்ணிற் கும் தென்பட்டன. அவற்றின் அருகே செல்வதற்கு யாருக்குத் தான் துணிவு பிறக்கும்? - தோழி : ஏன்? இந்த மின்னல் ஒளியில் தன் வேலையே துணை யாகக் கொண்டு அம்மலை வழியேதான் நம் பெருமான் இரவுக்குறி வருகின்றனன். அச்சமில்லாமையால்தானே அவன் அங்ஙனம் வருகின்றனன்? கடுங்குளிரையும் அவன் பொருட் படுத்துவதில்லையே! - தலைவி ஏடி பேதாய், அதனை என்னிடம் கூறற்க. என்குலை நடுங்குகின்றது. நீ அவனைப்பாராட்டுகின்றனை. அங்ஙனம் வருங்கால் வல் விலங்கு, பெரும் பாம்பு, சூரரமகளிர் நட மாடும் வழியில் நம் பெருமானுக்கு ஏதேனும் ஏதம் விளைந் தால் என்னாகும்? அதன் விளைவினை. ஒர்ந்து பார்க்க. அவனுக்கு இரவுக்குறி நேர்ந்தது நீ தானே! இத்தகைய பெருந் தவறு நீ செய்திருத்தல் கூடாது. - தோழி அதற்கு நான் என் செய்வேன்? ஒருநாள் இரவில் அவன் வந்து அளி செய்யாவிடினும் உன்னால் பொறுக்க முடிய வில்லை. உன் ஆற்றாமையை என்னால் சகிக்க முடியவில்லை. நின்னைக் காப்பாற்றுதல் என் கடமை யன்றோ? வேறு வழியின்மையால்தானே இதனைச் செய்ய நேர்ந்தது? தலைவி : தோழியே, என் உயிர் போயினும் போகட்டும். நம் பெருமான் என் பொருட்டு இந்தப் பேரிருள் நெறியில் வரு வதற்கு யான் ஒரு பொழுதும் ஒப்புக் கொள்ளேன். - தோழி : தேவி, நான் இப்பொழுது இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்புபோல் ஆகி விட்டேன். இரவில் வரற்க