பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் - 46l எட்டுத் தொகையில் : எட்டுத் தொகை நூல்களிலுள்ள சில உள்ளுறை உமமைகளில் ஆழங்கால் படுவோம். முதலாவதாக மிகச் சிறிய பாடல்கள் அமைத்த ஐங்குறு நூற்றில் சிலவற்றைக் காண்போம். இந்த நூலில் உள்ளுறை அமைந்திருப்பதைப் போல் வேறு எந்த நூலிலும் அஃது அமைந்திருப்பதைக் காணல் இய லாது ஈரடியிலும் உள்ளுறை ஒரடியிலும் உள்ளுறை. அவை மிகச் சுருங்கிய அளவில் பெருகிய பொருளை உள்ளடக்கி நிற் இன்றன. சில சொற்கள் நின்று பலவகையான பொருளைக் காட்டு இன்றன. பேருருவங்களைக் கண்ணாடி தனக்குள் அடக்கிக் காட்டுவது போலப் பெரும் பொருளை அடக்கிக் காட்டுகின்றன. சில உள்ளுறை உவமைகளை எடுத்துக் காட்டி விளக்குவோம். (1) நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன்' . என்பது மருதத்திணை உள்ளுறை. அரும்புகளையுடைய காஞ்சி மரத்தின் கிளைகளில் சிறிய மீன்கள் தங்கி இருக்கும் புதுமை வாய்ந்த மருதநிலத் தலைவன்’ என்பது இதன் பொருள். ஆற்றங் கரை யடுத்துக் காஞ்சி மரம் வளைந்து நீரில் படிந்திருப்பதை இன்றும் முசிறி, திருவரங்கம் போன்ற இடங்களில் காவிரியில் நீராடுவோர் நன்கு அறிவர். அம் மரத்தின் பல கொம்புகளில் நறுமணம் கமழும் மலர்கள் பூத்துக் குலுங்கி நிற்கும். நீ ரோட்டத் தைத் தழுவிய நிலையில் தாழ்ந்திருக்கும் கொம்புகளில் சிறு மீன்கள் துள்ளி விழுந்து தங்கிப் பின் நீரில் விழும். அதனால் பூவின் நறுமணமும் மீனின் புலால் நாற்றமும் ஒருங்கே கலந்து கமழும். இந்தகைய சிறப்புடையது மருத நிலம். அது போல அந்நிலத் தலைவனும் பரத்தையர் சேரியை அடுத்து வாழ்க்கைத் துணைவியுடன் புகழ் பரவ வாழ்கின்றான். இல்லறம் இனிதே நடைபெறுகின்றது. பரத்தையர் இடை இடையே தலைவனைப் பற்றி வசப்படுத்திப் பின் பிரிகின்றனர். அதனால் பழியும் புகழும் கலந்து ஊரில் பரவுகின்றது என்பது விளக்கம். இது தோழியின் கூற்றாக அமைந்துள்ளது. புறத்தொழுக்கத் தத்தில் நெடு நாள் ஒழுகி இது தகாது எனத் தெளிந்த மனத் தனாய் மீண்டும் தலைவியொடு ஒழுகி நின்ற காலத்தில் தலைவன் தோழியுடன் சொல்லாடி யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது? என்று வினவியபொழுது அவள் சொல்லியது. இதில் 14. இங்குறு. 1