பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} அகத்திணைக் கொள்கைகள் 3 ஊடல் நிகழும். உழைப்பு அதிகமின்றி வளம் மிக்க மருத நிலத்திலுள்ள மக்களிடமே, 'காதல் மாதர் முலையினொடும் பொழுது போக்கும்' பழக்கம் இயல்பாக அமையும். எனவே ஊடல் மருத நிலத்திற்காயிற்று. இல்வாழ்க்கைக் காலத்தில் பகை களைதல்பற்றிப் பிரிந்து வினைமுற்றி மீள்வோன் பெரும்பாலும் ஊர் நோக்கி வருங்காலம் கார்ப் பருவமாகிய ஆவணி புரட்டாசி மாதங்களாகும். இக் காலத்தில் வெப்பமும் தட்பமும் மிகாது நீரும் நிழலும் பெறுதல் எளிது. ஊர்ப்பக்கத்திலும் காடும் சோலையும் காட்சி பெருகும்; மாவும் புள்ளும் மகிழ்ந்து விளையாடும். மாலையில் பசுக்கள் மன்றில் புகும்; கோவலரின் குழலோசை எங்கும் இனிக்க எழும். இச்சூழ்நிலை காமக் குறிப்பை மிகுவித்துப் பிரிவாற்றிக் கொண்டு தனித்திருக்கும் தலைவியது கற்பு நிலையைப் பெருகக் காட்டும். எனவே, இருத்தல் முல்லைக்காயிற்று. தலைவனைப் பிரிந்த கிழத்திக்குக் கடலும் கழியும் கானலும் காணுந்தோறும் ஆற்றாமையைத் தோற்றுவிக்கும். ஆள் அரவம் இல்லாத கடற்கரையிலிருந்து தனிமையில் நாம் நின்று பார்த்தால் நம்மிடமும் இவ்வாற்றாமை தோன்றக் காணலாம். இச்சூழ்நிலை இரங்கலைப் புலப்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது. ஆகவே, இரங்கலுக்கேற்ற நிலைக்களன் நெய்தலாயிற்று. இவ்வாறு இவற்றிற்கு இன்னும் ஏற்புடைய காரணங்கள் உளவேனும் அவற்றையும் கூறிக் கொள்ளலாம். " 13. கலிங். பரணி-277 14. இராகவய்யங்கரர், மு: தொல்காப்பியப் பொருளதிகா ஆராய்ச்சி. பக் (23-24) 7