பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை உவமம் 463 (3) கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ் அருவரைத் தீந்தேன் எடுப்பி அயலது உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்'" என்பது குறிஞ்சித்தினை உள்ளுறை குரங்கின் தொழிலை நன்கு கற்றறியாத மந்தியின் பார்ப்பு தேன் இறாலின்கண் தேன்பருக எண்ணி அதன்கண் உள்ள ஈக்களை அலைத்து எழுப்பிவிட்டுப் பின் அவற்றிற்கு அஞ்சி அருகிலுள்ள மரக்கிளையுள் பாயும் நாட்டை யுடையவன்' என்பது இதன் பொருள். இதன்கண் தலைவனது தவற்றினை உள்ளுறையாக அமைத்துக் கூறும் தலைவியின் திறம் வியக்கத் தகுந்ததாக அமைந்துள்ளது. தலைவன் நாட்டிலுள்ள மந்தியின் பார்ப்புக்கு தேன் பருகும் அவாமட்டிலும் இருந்தது. அஃது ஆண்குட்டியாக இருப்பினும் தேனினை எவ்வாறு எடுத் துண்பது என்ற வழிதுறை அறியும் போதிய ஆற்றலின்மையால் நஞ்சுடைய ஈக்களை இறாலின் கண்ணின்றும் எழுப்பிவிட்டுப் பின்னர் அவற்றிற் கஞ்சி உயிர் தப்பினால்போதும் என்று பின்னும் கேடு தரும் இயல்பினையுடைய அச்சந்தருமாறு உயர்ந்திருக்கும் பெரிய மரக்கிளையில் பாய்கின்றது. அங்ஙனமே தலைவனும் இரவுக் குறிக்கண் வரும் உபாயம் உணராது தலைவியும் தோழி யும் கூறிய குறியைப் பிழைத்து அல்ல.குறிப்பட்டுத் தாய் முதலி யோருக்குத் தன் வருகையை உணர்த்திப் பின்னர் அவர் ஆரவாரம் கேட்டு உருகெழுகாட்டினூடே ஓடிப் போயினான். இது தலைவியின் கூற்றாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவுக் குறிக்கண் வந்த தலைவன் அல்ல.குறிப்பட்டு, இடையூறு எய்தி வந்தே மீள்வானாயினன். இவற்றால் பெரிதும்வருந்தியிருந்த தலைவி மறுநாள் தலைவன் சிறைப்புறத்தில் வந்து நிற்றலை அறிந்து தவற்றிற்குக் காரணம் தலைவனது பேதைமையே என்பது தோன்ற முதல்நாள் இரவு நிகழ்ந்தவற்றைத் தோழிக்குக் கூறுவ தாக அமைந்துள்ளது. இது. இதற்கெல்லாம் தீர்வு காண்டல் விரைந்து வரைந்து கோடலேயாகும் எனக் குறிப்பால் வரைவு கடாயவாறும் நுண்ணிதின் உணர்ந்து மகிழத்தக்கது, (4) வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக் கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை' 16. டிெ-272 17. കൂ.-323