பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 அகத்திணைக் கொள்கைகள் (வள்ளயிறு-கூரியபல்; வயவு-வயாநோய்: கேழல்-காட்டுப் பன்றி; கவலை-கவர்த்த வழிகள்! என்பது பாலைத்திணை உள்ளுறை அமைந்த பகுதி. இதன்கண், கூரிய பற்களையுடைய செந்நாய்பன்றி இறைச்சியைத் தின்ன வயா நோய் கொண்டுள்ள தன் பெண் நாயின் பொருட்டுக் கள்ளியில் மறைந்து பன்றியை எதிர்பார்த்துக் கிடக்கும் இடமான வெவ்விய பாலை நிலம் கவர்த்த வழிகளையுடையது என்று கூறப் பெற் றுள்ளது. இங்ஙனமே, தலைவனும் தன் ஆருயிர்க் காதலியோடி ருந்து அவள் இயற்றும் அறத்திற்கு ஆக்கம் செய்யும் பொருட்டு இந்த வெஞ்சுரக் கவலை நீந்தி பொருள்தேடும் நற்செயலை மேற் கொண்டுள்ளான். தலைவனின் கூற்றாக அமைந்தது இது. பொருள்வயிற் பிரிந்து வெய்ய பாலை நிலத்தில் செல்லுகின்ற தலைவனின் நெஞ்சம் தலைவியினது தண்ணிய குணநலங்களிலே ஈடுபடுதலான் அவனுக்கு அந்நெறியின் கொடுமை தோன்றாமை கண்டு மகிழ்ந்து அந்த நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்துள்ளது. (5) தாதார் பிரசம் ஊதும் போதார் புறவின் நாடுகிழ வோனே" (பிரசம்-வண்டு; போது-மலர்; புறவு-முல்லை நிலம்) என்பது முல்லைத்திணை உள்ளுறை இம்முல்லை நிலம் யாண்டும் தேன் பொதுளிய நறுமலர்களோடு அரிபெறா நிற்ப வண்டுகள் நாற்றிசையின்றும் வந்து தாம் வேண்டியாங்கு மலரின்கண் தேனைப் பருகிக் களிகொண்டு இன்னிசைப் பாடித் திரிகின்றன என்பது இதன் பொருள். இங்ங்ணமே, தலைமகனும் தலைமகளும் அன்பால் நிரம்பிய நன்னர் நெஞ்சத்தோடு இனிதே இருப்ப, அவர் தம் செல்வ மனைக்கண் நாற்றிசையிலுமிருந்து விருந்தினரும் இரவலரும் வந்து தாம் விரும்பிய வண்ணம் உண்டு உடுத்து அவர் இனிய புகழைப் பாடிப் பரவா நிற்பர் என்ற பொருள் இந்த உள்ளுறைக்கண் அமைந்து கிடப்பதைக் கண்டு மகிழலாம். இது செவிலிகூற்றாக அமைந்துள்ளது. கற்புக் காலத்தில் தலைவன் மனைக்கண் சென்று அங்குத் தன் மகளும் மருமகனும் ஆவியும் உடலும்போல் ஒன்றி இன்புற்று அமர்ந்து வாழ்கின்ற நல்வாழ்க்கையின் மாண்பினைக் கண்ணும் நெஞ்சும் குளிரக் கண்டு 18. டிெ-406 -