பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-8 திணை மயக்கம் அகத்திணை நிகழ்ச்சிகளைப் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனப் பாகுபாடு செய்து அவ்வொழுக்கத்திற் கேற்ற இயற்கைச் சூழலைப் பாகுபடுத்தும் முயற்சியே திணைப் பாகுபாட்டில் உள்ளது. இத்தினைப் பாகுபாட்டில் உரிப் பொருளே பாடற்பொருளாக அமைந்து கிடப்பதைக் காண் கின்றோம். முதற் பொருளும் கருப் பொருளும் அவ்வுரிப் பொருளுக்குச் சிறப்புத் தந்து நிற்கப் பின்னணியாகப் பயன் படுவனவாகும். அவ்வாறிருப்பினும் இம் மூன்றும் பிணைந்த பிணைப்பினையே திணை என்று கூறும் மரபே பெருவழக்காக உள்ளது. ஆகவே, ஒவ்வொரு திணைக்கென்று தனித்த அமைப்பு உண்டு என்பதும், முதற்பொருள் முதலிய மூன்றும் அதன் கூறுகளே என்பதும், இவற்றின் பிணைப்பு ஐந்திணைப் பாடல் கட்கு இன்றியமையாதது என்பதும் தெளிவாகும். இப்பிணைப் பினை வற்புறுத்தும் நிலையில் பிறிதோர் உண்மையும் விளக்கம் அடைகின்றது. முல்லை, குறிஞ்சி என்பனவற்றை அகத்தினைக் கூறுகளாகக் கூறினும், அவை தம்மளவில் பகுதிகளல்ல; முழுமை பெற்று நிற்பன என்பதே அது. 'திணை என்பது, அம்மூன்றனை பும் கொண்டே நிற்றலின்' என்ற நச்சினார்க்கினியரின் உரையும்: இதற்கு அரண் செய்கின்றது. உரிப் பொருள்களைக் காமத்தின் வெவ்வேறு தோற்றங்களாகக் கூறிவந்தாலும் முதல், கரு, உரி இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு தினையும் தனித்தன்மை உடையன; முழுமை பெற்று நிற்பன. . திணை மயக்கம் என்பது மேற்கூறிய இப்பிணைப்புக்கு அல்லது முழுமைக்குக் கூறும் ஒரு புற நடையாகும். ஒருதிணையின் எல்லைக்கு உட்பட்ட சில கூறுகள் பிறிதொரு திணையின் கட்டுக் 1. தொல். அகத்திணை 2 நச். உரை)