பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 அகத்திணைக் கொள்கைள் பின்னர்த் தலைவியின் கூற்றினை மேலும் ஆராயும்பொழுது ‘என்னை' என்றதனால் இவள் ஒரு தலைவனுக்குக் கற்புக் கடம் பூண்டனள் என்பதனையும் அறிந்து கொள்ளுகின்றாள். மேலும் 'எமக்குத் தழையாயின என்னும் தொடரால் அத் தலைவன் இவட்குத் தழையைக் கையுறையாகக் கொடுக்க இவள் அதனை ஆர்வத்துடன் ஏற்று அணிந்து கொண்டனள் என்பதனையும் தெரிந்து கொள்ளுகின்றாள். இங்கனம் தலைவி தோழிக்கு அறத் தொடு நிற்குங்கால் செவிலியிடம் சூழ்ச்சி பிறந்து அவள் தோழியை வினவுவாள். வினவவே, தோழி பின்னும் விளக்கமாக அதனைச் செவிலிக்கு உணர்த்துவாள். இங்ஙனம் தலைவியின் பேச்சால் உணரப்படும் குறிப்புப்பொருள் இறைச்சியின்பாற் படும். இன்னும் இப்பாடலை நுணுகி ஆராயுங்கால் அவர் சாரல வாகிய மரங்கள் பொன்வீயும் மணியரும்பும் உடையன என்புழித் தலைவனது திருவுடைமை சிறப்பிக்கப்பெறுவதால் இஃது அறத் தொடு நிலைவகையில் ஏத்தலும், எமக்குத் தழையாயின. என்புழி, அவன் அன்போடு கையுறை நல்கினான் என அவன் அன் புடைமை சிறப்பிக்கப் பெறுதலான் வேட்கை யுரைத்தலும், கையுறை தந்தான் எனவே அளித்தலும்’, ‘என்னை' என்ற தனால் தம்முள் தாம் தலைமை பெற்றமை தோன்றலின் 'தலைப் பாடும் ஆகிய பிற அறத்தொடு நிலைவகைகளும் தோன் றுதல் கண்டு மகிழலாம் . இனி, எட்டுத்தொகை நூல்களிலுள்ள சில இறைச்சிப் பொருள்களைக் கண்டு அவற்றில் ஆழங்கால் படுவோம். ஐங்குறு நூற்றில் : சில இறைச்சிப் பொருள்களைக் கண்டு நுகர்வோம். (1) களவில் ஒழுகிய நெய்தல் நிலத்தலைவன் பொருளிட்டும் பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லுகின்றான். அங்ஙனம் சென்றவன் பொருளிட்டிக் கொண்டு திரும்புகின்றான். 6. தோழியைத் தலைவி அன்னை என்றலும், தலைவியைத் தோழி அன்னை என்றலும், இருவரும் தலைவனை ‘என்னை என்றலும் புலனெறி வழக்கிற்குப் பொருந்தி வரும் ஒரு பழைய நெறியாகும் (தொல் - பொருள். பொருளியல் நூற்பா 50 இளம். காண்க.) 7. அறத்தொடு நிலை ஏழுவதைப் படும் என்பது எளித்தல்: எனத் தொடங்கும் பொருளியல் நூற்பா 12 ஆல் யப் பெறும். கு குளியல் நாற்ப 12ஆல் அறி