பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 அகத்திணைக் கொள்கைகள் திரையிமிழ் இன்னிசை அளைஇ அயலது முழவிமிழ் இன்னிசை மறுகுதொ றிசைக்கும் தொண்டி அன்ன பணைத்தோள் ஒண்டொடி அரிவைஎன் நெஞ்சுகொண்டோளே." (திரை-அலை: இமிழ் ஒலிக்கின்ற; அளைஇ-கலந்து முழவுமத்தளம்; பனைதோள்-மூங்கில் போன்ற தோள்கள்; தொடி-வளையல்; அரிவை-நங்கை.) . இந்த நெய்தல் திணைப்பாடலில் வெளிப்படையாகப் புலனாகும் பொருள் இது: "என்னுடைய உள்ளம் முழுவதையும் கவர்ந்து கொண்ட இந்நங்கை கடல் அலைகள் எழுப்பும் ஒலியுடன் மத்தளத்தின் இனிய ஓசை முழங்கும் தெருக்களையுடைய 'தொண்டி என்றும் பட்டினத்தைப்போன்று கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிகின்ற ஐவகை இன்பங்களையும் தன்பால் கொண்ட மூங்கிலையொத்த தோள்களையும் ஒள்ளிய வளையல் களையும் உடைய நங்கையாவள்’’ என்பது, தலைவனின் கருத்தில் அடிப்படையாக உறையும் பொருள் இது: என்னுடன் புணர்ந்த நங்கை இயற்கையழகும் செயற்கை அழகும் நிறைந்த நங்கையாவள்’’ என்பது. இக்கருத்துள்ள பொருள் தலைவனின் கூற்றால் பெறப்படுகின்ற திறத்தைக் காண்போம். திரை இமிழ் இன்னிசை என்பதனால் இயற்கை யழகும், முழவு இமிழ் இன்னிசை என்பதனால் செயற்கையழகும் பெறப்படுகின்றன. இயற்கையழகு இல்லாத வழி செயற்கையழகு சிறவாமையால் அது முற்படக்கூறப்பெற்றது. மறுகுதொறிசைக் கும்’ என்றதால் தலைவியின் உறுப்பெல்லாம் பேரின்பம் நல்கும் இயல்புடையனவாதல் அறியப்பெறும். இவ்வாறு கொள்ளும் பொருளே இறைச்சியாகும். . இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே." . என்பது தொல்காப்பியம். இறைச்சி-சொல்லப்பெற்ற பொருளின் புறத்தே தங்குவது என்னும் பொருளுடையது. இறை-தங்குதல். இதனை ஆராய்ந்து உணர்பவர்கள் மட்டுமே அறிதல் கூடும். இதனை வடநூலார் தொனி என்பர். ஈண்டு மாந்தர் நுகர்வதற் குரிய ஐந்து வகை இன்பங்களையும் தொண்டி தன்பால் கொண் 9. டிெ-171 10. பொருளியல்-34 (இளம்.)