பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 அகத்திணைக் கொள்கைகள் அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக் கானக் குறவர் மடமகள் ஏனல் காவல் ஆயினள். எனவே." (குரல்-திணைக்கதிர்; குறைத்த-கொய்த ஆர்பதம்-உணவு: கோள்-காய்: கானம்-காடு; ஏனல்-தினைக் கொல்லை.) இக் குறிஞ்சித் திணைப் பாடலில் தலைவி வெளிப்படையாக உணர்த்தும் பொருள்: பசிய இள்ளாய், அஞ்சற்க. உணவு கொள் ளும் நின்குறையை முடித்த பிறகு நின்கிள்ளையிடத்துச் செல்லின், ஆண்டுள்ள மலைகிழவோர்க்குக் குறவர் மடமகள் ஏனல் காவலா யினள் என்ற என் குறையை உரைக்குமாறு கைகளைக் குவித்துத் தொழுது இரந்து கூறுகின்றேன்' என்பது. இதில் என்னைக் கைவிட்ட கொடுமையையுடையவர் சாரலாயிருந்தும் அச்சாரலின்கண் உள்ள பலாமரங்கள் பிறர்க்குப் பயன்படுமாறு காய்க்கின்றனவே; இஃதென்ன வியப்பு?’ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியதை நுணுகி அறிந்து மகிழ்க, பல்கோட் பலவின் சாரல் அவர் நாடு’ என்பதனால் "அவர் மலைச் சாரற்குச் செல்வையாயின் இத்தினையினும் இனிய பலாச் சுளையை ஆர்பதமாகப் பெறலும் பெறுகுவை” என்று ஆண்டுச் செல்லுவதற்கோர் ஊதியத்தையும் குறிப்பாகப் புலப் படுத்துவதும் அறியப்பெறும். - அகநானூற்றில் ஓர் இறைச்சிப் பொருள் கண்டு மகிழ் வோம். - - களவில் ஒழுகி வரும் தலைவன் ஒரு நாள் இரவுக் குறியை நாடி வருகின்றான். தோழி அதனை மறுத்து பகற்குறி அமைக் கின்றாள்; அக்குறியிடத்து வருமாறு தலைவனைப் பணிக்கின் றாள். இப்பொருள் அமைந்த பாடற் பகுதி வருமாறு : நாம அருந்துறைப் பேர்தந்து யாமத்தி ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! ஒருநாள் விழுமம் உறினும் வழிநாள் வாழ்குவள் அல்லள்என் தோழி; யாவதும் ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர் 21. டிெ-102