பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் 503 (2) தலைவியும் தோழியும் வள்ளைப் பாட்டு பாடிக் கொண்டே மூங்கில் நெல்லைக் குற்றுகின்றனர். அதில் வரைவு கடாவும் குறிப்பு இருந்தது. சிறைப்புறமாக வள்ளைப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கும் தலைவன் வரைந்து கோடலை வேண்டு கின்றான். தலைவியின் தந்தையும் வரைவுடன்படுகின்றான். இச்செய்தியைத் தோழி தலைவிக்கு உரைப்பதாக அமைந்த ாாடல் இது: பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக் கோடுலக்கை யாகநற் சேம்பின் இலைகளகா ஆடுகழை நெல்லை அரையுரலுள் பெய்திருவாம் பாடுகம் வாவாழி தோழிநற் றோழி பாடுற்று.”* (வயக்களிறு-வலிய யானை; கோடு.கொம்பு: சுளகு-புடைக் கும் சாதனம்; ஆடு கழை-மூங்கில்; அரையுரல்-பாறை யாகிய உரல்) இக்குறிஞ்சிக் கலியில் தோழி வெளிப்படையாக உரைக்கும் பொருள் இது: "தோழி! வாழ்வாயாக! நாம் பாடுவோம் வா. இருவரும் மூங்கிலின் நெல்லைப் பாறையாகிய உரலில் பெய்து யானைக் கொம்பாலாகிய உலக்கையால் குற்றிச் சேம்பின் இலை யாகிய சுளகால் புடைத்துக் கொண்டு பாடுவோமாக என்பது. இதில் தோழி உணர்த்த விரும்பும் பொருள் இறைச்சிப் பொருளாக அமைந்திருப்பதை விளக்குவோம். உயர்ந்த மூங்கிலின் கண்ணினின்றும் தானாக உதிர்ந்த நெல்லை எடுத்துக் கொண்டு உரலில் பெய்து என்றதனால் உயர்ந்த தலைவனை தெய்வந்தானே கொண்டு வருதலின் அவனை நம் வயத்தனாக் கினேம் என்றும், வள்ளைப்பட்டிற்கு ஏதுவாகிய கோடு உலக்கை யாக என்றதனால் கோடு நெல்லைப் பயன்படுத்தினாற் போல நம் வரைவு கடாவலால் இத்தலைவனை இல்லறப் பயனை எய்து விக்கின்றேம் என்றும், சேம்பிலை புடைத்தல் தொழிலை முற்ற முடித்து அரிசியை ஆக்காத தன்மைபோல இக்களவொழுக்கத் தால் நம் தலைவன் வரைந்து கோடலை முற்ற முடியாதிருக் கின்றோம் என்றும் இறைச்சி பொருட்புறத்ததாய் நின்றவாறு நுண்ணிதின் உணர்ந்து மகிழ்க. 24. குறிஞ்சிக் கலி-5