பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் - - 509 என்பதனால் அகப்புலவனுக்கு முதற்பொருள் சுருப் பொருள் அறிவு இன்றியமையாதது. அவ்வறிவு பொது வாக இருந்தாற் போதாது. உரிப்பொருளுக்கேற்ப இயற் கையை வடித்துக் காட்டும் தனித் திறம் வேண்டும். இத் திறம் இல்லாப் புலவன் அகம் பாடுதற்கு உரியவனல்லன் என்று கூடக் கூறலாம். ஆதலின் சங்கத் தமிழ்ப் புலவர்கள் அகத்திணைக் கல்வியையும் இயற்கைக் கல்வியையும் ஒருங்குப் பெற்றனர். அகப்பாடல்களின் இயற்கைப் பகுதி களையும் வரலாற்றுப் பகுதிகளையும் நீக்கி விட்டால் உரிப் பொருளின் கதி என்னாகும்? பாடு பெறுமா? நீடு பெறுமா? அகப்பாட்டின் யாப்பில் முதல் கருப்பொருள் கட்கு நீண்டு விரிந்த இடம் இருத்தலால், புலவன் மிக்க இலக்கிய உரிமை பெறுகின்றான். உரிப் பொருளைத் தலையாக வைத்து உலகத்தையே சொல்லும் வாய்ப்புப் பெறுகின்றான். திணை மயங்கலாம், கருப்பொருள் மயங் கலாம் என இலக்கணம் விட்டுக் கொடுத்தலின், வேண்டி யவாறு சூழ்நிலை அமைக்கும் புனைவுரிமை பெறுகின் றான். நடுநிலை பெற ஆராய்ந்து காணுங்கால் அகத் திணையின் காதற்பொருள், கோவையற்ற தனித் தனிக் காதலுணர்ச்சிகள், தனிச் செய்யுளமைப்பு, முதல் கருப் புனைவு, உள்ளுறையுவமம், மெய்ப்பாடுகள் எல்லாம் இளம் புலவனின் புதுக் கூர்மையை வெளிப்படுத்து கின்றன; வளர்க்கின்றன; வனைவுறுத்துகின்றன. நல்ல பிள்ளைபோல் அகவிதிகட்கு அடங்கி இலக்கியம் கண்ட மையாற்றான், சங்கப் புலவரின் அறிவு (ஒளிச்) கதிர் போல் ஒளிறுகின்றது; சங்கப் பனுவல்கள் ஞாயிறு திங்கள் போல் நின்று பரந்து வாழ்வொளி வீசுகின்றன.' இந்த இயலில் திணையைப் பாடினதாலும், துறையைப் பாடினதாலும், உவமையை அழகாக அமைத்துப் பாடினதாலும், நயஞ்செறிந்த தொடர்களை அமைத்துப் பாடினதாலும் சிறப்புடன் திகழும் சங்கச் சான்றோர் பற்றிய செய்திகளும் அவர்தம் பாடல்களின் சிறப்பும் ஆராயப்பெறுகின்றன. 2. தமிழ்க் காதல் (இரண்டாம் பதிப்பு)..பக் (363-64)