பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணை மயக்கம் 35 பிணைந்து மயக்கமின்றி வரின் அஃது இன்ன திணைப்பாடல் என்று வரையறை செய்தல் எளிதாகும். ஆயின் முதல் கரு உரிப் பொருள்கள் மயங்கி வருமானால் எவ்வாறு திணைப் பாகுபாடு செய்வது என்பதைத் தொல்காப்பியர். முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே துவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை' என்ற நூற்பாவில் குறிப்பிடுவர். இந்த முறையினால்தான் திணைப்பாகுபாடு செய்யவேண்டும் என்பதையே முறை சிறந் தனவே என்ற தொடர் விளக்குகின்றது. இதற்கு இளம்பூரணர் தரும் விளக்கம்: யாதானும் ஒரு செய்யுட்கண் முதற் பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின் முதற்பொருளால் திணை யாகும் என்பது உம், முதற்பொருள் ஒழிய ஏனைய இரண்டும் வரின் கருப்பொருளால் திணையாகும் என்பது உம், உரிப்பொருள் தானே வரின் அதனால் திணையாகும் என்பதுTஉய் ஆம்' என்பது. எனவே, திணைப் பாகுபாட்டில் முதற் சிறப்பு முதற்பொருளுக்கும் அடுத்த சிறப்பும் கருப்பொருளுக்கும், அதற்கடுத்த சிறப்பே உரிப் பொருளுக்கும் தரப்பெறுகின்றன என்பது ஈண்டு அறியத் தக்க தொன்று. - திணை உணர்ச்சிக்கு, மயங்காது வரும் முதற்பொருளாகிய நிலமே அடிப்படையாகும். நிலம் அடிப்படையாக அமையுங்கால் அந்நிலத்திற்கு முற்றிலும் மாறாகக் கருப் பொருளைக் கொண்டு அந்நில உணர்ச்சியை ஏற்படுத்துதல் அரிது.” ஒரு நிலத்துப்பூவும் புள்ளும் பிறிதொரு நிலத்தோடு வந்து கலந்து நிற்கலாமேயன்றி அந்நில உணர்ச்சியைத் தரமுடியாது. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொரு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்." என்ற நூற்பாவும் இதனையே விளக்கும். இத்தகைய இயற்கைச் சூழலில் இன்ன உரிப்பொருள் புலனெறி வழக்கில் தோன்றும் 8. டிெ - 3 (இளம்), 9. இளமரக்கிர்க்களிலும் உயிர்க்காட்சிச் சாலைகளிலும் நில உணர்ச்சியை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சி ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. 10. அகத்திணை-21 (இளம்)