பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 அகத்திணைக் கொள்கைகள் (நீர்-கடல்; இல்லியல்பு-குடிப்பிறப்பு] என்று பேசுகின்றது. (ii) பேயனார் பேயனார் 104 அகப்பர்டல்களின் ஆசிரியர். ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்கள் 100 இவர் பாடியவை. அகநானூற் றில் ஒன்றும் (234), குறுந்தொகையில் மூன்றும் (233, 359, 400) இவர்தம் பாடல்களாகும். புறமாக யாதும் இவர் பாடிற்றிலர். ஐந்து திணைகளுள் முல்லையும் அதன் உரிப்பொருளான இருத்த லும் இலக்கியப் புனைவுக்குப் பெருவாய்ப்பு நல்குவன அல்ல. புலவரின் கற்பனைத் தி றத்தால் நான் முல்லைப் பாடல்கள் வளம் பெறுதல் வேண்டும். இதில் பேயனார் வெற்றி பெற்றுள் ளார் என்றே சொல்லலாம். இவர்தம் ஒரே ஒர் அகநானூற்றுப் பாடலில் முல்லைச் சூழ் நிலை காட்டப் பெறுகின்றது. மழை பெய்துள்ளது. நுண்மணல் பரவிய குளிர்ந்த நீர்நிலையிடத்து அன்னப் பறவைகள் வரிசை யாகப் பறக்கின்றன. பெண் மான்கள் ஆண் மான்களுடன் புணர்ந்த இன்பத்திற்குப் போக்கு வீடாக இடையூறின்றித் துள்ளித் திரிகின்றன. அழகிய சிறகினையுடைய வண்டினங்கள் முல்லை நறுமலர்த் தாது நயந்துதித் தம் களிப்பிற்கு அறிகுறியாக இன்னிசை பாடுகின்றன. இது முல்லை நிலத்து மாலைக் காலச் சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையி லமைந்திருந்த ஒர் ஊரின்கண்ணே வாழும் தலைவியை நோக்கி வருகின்றான் வினை முற்றி மீளும் தலைவன்." பேயனாரின் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் மிகக் குறைந்த அளவு அடிகளைக் கொண்டனவாதலால் க ரு ப் .ெ பா. ரு ள் புனைவுக்கு இடந்தர வில்லை. எனினும், முதல் கரு உரி என்ற மூன்றானும் மரபுப்படி சிறிதும் உள்ள சிறப்புக் குன்றாது பாட முடியும் என்பதை நிலைநாட்டிய பெருமை இவருக்கு உண்டு. 5. அகம்-234