பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 அகத்திணைக் கொள்கைகள் |ஊக்கி-ஆட்டுவாய்; கைநெகிழ்பு-கைநெகிழ்ந்து, வயா செத்து-மயக்கம் நீங்கி; ஒய்என-விரைய) இவ்வாறு தோழி தலைவிக்குக் கூறும் கருத்தினைத் தலைவி 'கயிறு விடுவதாகவே எடுத்துக் கொள்வாள்; தன் உள்ளோட் டத்தை அறிதற்குத் தோழி மேற்கொள்ளும் ஒர் உத்தி என்றே எண்ணுவாள். அன்புடையோர் அன்புடையோரிடத்துக் கூறும் போது பொய் வரலாம் என்பது அகத்திணைச் சான்றோர் துணிபு. சொல்வோரும் கேட்போரும் பொய் என்பதை அறிவர். ஒரு நற் பயன் நோக்கிக் கையாளும் மறைமுறை என்றே இருவரும் பொருள் கொள்வர். அறக்கழி வுடையன பொருட்பயன் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப.' அன்பினை அடிப்படையாகக் கொண்ட அகப்பொருளுக்குத் துணை செய்யுமாயின், உலகியல் அறங்கட்கு மாறுபட்டனவும் இலக்கிய வழக்காக வரலாம் என்பது தொல்காப்பியர் செய்த இலக்கணம். விரிவஞ்சி ஐங்குறுநூறு (குறிஞ்சிப்) பாடல்களைத் தொடவில்லை. (iv) மருதம்பாடிய இளங்கடுங்கோ இவரும் சேரர் மரபினர்; பாலை பாடிய பெருங்கடுங்கோ வின் இளவல் என்று ஊகிக்கப்பெறுகின்றார்; இவர் மருதத் திணை ஒன்றையே பாடியவர். அதனை மிகவும் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடைய வராதலால் மருதம் பாடிய இளங் கடுங்கே என்று சிறப்புப் பெயருடன் திகழ்கின்றார். இவர் பாடியனவாகக் கிடைத்துள்ள பாடல்களில் அகநானுாற்றில் இரண்டும் (பாடல் 96, 176) நற்றிணையில் ஒன்றும் (பாடல் 50) உள்ளன. மருதத்திணைக் காட்சிகளை இடங்கட்கேற்பப் புனைந்து காட்டலில் வல்லவர் இக்கவிஞர் பெருமான். இவர் மருதத் திணை 20. பொருளியல்-22