பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 அக்த்திணைக் கொள்கைகள் தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே,' (பல்லிருங் கூந்தல் மகளிர்-பொதுப் பெண்டிர், ஒல்லா. பொருந்தா முயக்கு-புணர்ச்சி, தார்-மாலை. என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறினான். இங்ஙனம் கூறும் வழக்கு இற்பெண்டிற்கு இல்லை அன்றோ? எனவே, ஆடவன் மெய்யாகப் பரத்தன் அல்லன் ஆயினும், சமுதாயக் கண்ணுக்கும் மனைவியின் உள்ளத்துக்கும் பரத்தன்போலத் தோற்றம் அளிக்கின்றான். இதுவே சில மருதக் கலிக்கு அடித்தள மாக அமைந்தது. புலவொழுக்கத்தின்பாற்பட்ட கணவன் தான் துறவகத்திருக் கும் முனிவர்களாகிய கடவுளர்களிடம் தங்க வந்ததாகக் கூறு கின்றான். நெட்டிருங் கூந்தல் உடைய கடவுளா? என்று நகையாடிப் புலந்தாள் அவன் துணைவி (கலி-93). வெளியில் சென்று மீண்ட தலைவனை எங்குச் சென்றிருந்தாய்?' என வினவிய தலைவிக்குக் குதிரை ஏறிவருகிறேன்' என்றான் அவன். 'கூந்தலும் மேகலையும் சிலம்பும் உடைய காமக் குதிரையை அணிநிலா முற்றத்தில் இவர்ந்து விளையாடினையோ? அக் குதிரை விளையாட்டு உன் அழகைக் கெடுக்கும்.’’ என்று புலந்தாள் இல்லக் கிழத்தி கலி-96) இன்னொரு தலைவன் 'நம் வலைக்குள் ஒரு யானை மாட்டிக்கொண்டது. அந்தப் புதிய யானையைக் கண்டு களித்து வந்தேன்' என்கின்றான். 'ஆம்; உண்மைதான். நானும் கேள்வியுற்றேன். அந்த யானைக்கு நெற்றியிலே திலகம் உண்டு. தொய்யில் ஒவியம் வரைந்த வனமுலை உண்டு. காதில் மகரக்குழை உண்டு. மணப்பொடி பூசி நறுங்கள்ளுண்டு எல்லாரை யும் பிணித்தற்குக் கதவுக்கருகில் சாய்ந்து நிற்பதும் உண்டு. மதம் மிகுந்துவிடாதபடி அதனை மெல்லெனப் பரிகரித்துக் கொள்' என்று புலந்து கூறினாள் இல்லக்கிழத்தி (சலி-97). பிறிதொரு தலைமகன், -- 'பொருகரை வாய்சூழ்ந்த பூமலி வையை வருபுன லாடத் தவிர்ந்தேன். அதனால் காலங் கடந்தது' என்கின்றான். 'உண்மையே. நீ ஆடிய புனலுக்குக் கருமணல் கூந்தலாகும்; மீன்கள் நயனங்களா 36. புறம்-37,