பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 அகத்திணைக் கொள்கைகள் (wi) ஒரம் போகியார் ஓரம்போகியார் 109 அகப்பாடல்களை நமக்குத் தந்த பேராசான். ஐங்குறுநூற்றில் முதல் 100 பாடல்களை (மருதத் திணை) இயற்றியவர். இவை தவிர குறுந்தொகையில் ஐந்து(0,70, 122, 128, 374), நற்றிணையில் இரண்டு (20, 360), அகத்தில் இரண்டு (286 316) ஆக ஒன்பது அகங்களின் ஆசிரியர். மருதத் திணையை விரித்து அந்நிலத்திற்குரிய கருப்பொருள்களைத் திணைக்கேற்ற பொருள்களாகக் கொண்டு உள்ளுறை உவமம், இறைச்சி முதலாயவற்றை அமைத்துப் பலவகைச் சத்துவமும் புலப்படக் காட்டிப் பரத்தையிற் பிரிவு முதல் எல்லாவற்றையும் தெளிவாகக் கூறும் ஆற்றலுடையவர். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மருதத்திணை பற்றியவையே. இவர்தம் களவுப் பாடல்களில் தலைவி கூற்று இடம் பெறவில்லை. கபிலர், அம் மூவனாருக்கு அடுத்தபடியாக அதிகமான பாடல்களை இயற்றி யவர் இப்பெருமகனார். மருதத்திணைப் புலவராகிய இவர் பரத்தமைத் துறைகளை பல்வேறு வகையாகச் சிறப்பித்துப் பாடியவர். பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் இல்லம் திரும்பித் தோழியை வாயில் வேண்டி நிற்கின்றான். வந்தவன் அங்கவர் யாரையும் அறியேன்” என்று சூள் செய்கின்றான். தோழி, பரத்தையர் மாட்டும் நீ இங்ஙனமே சூள் செய்து அவர் நலன் நுகர்ந்து இப்பொழுது பிரிந்தாய் அவ்வியல்பே ஈண்டும் நின்பால் உள்ள தாதலின் நின்சூள் ஏற்கத்தகுவதன்று என்று கூறித் தோழி வாயில் மறுக்கின்றாள் (குறுந் 384) இன்னொரு தலைவன் யாரையும் அறியேன் என்று சொல்லிக் கொண்டு வருகின்றான். தலைவி அவனை நோக்கி, ஐயனே, நேற்று நின்னைப் புணர்ந்த, குறிப்பை யாம் நோக்கி ஏக்கமுற அக்குறிப்புகளோடு பரத்தை யொருத்தி இத்தெருவில் வந்தாள். அவளே இன்று நின்னைப் பிரிதலாலே நின் முயக்கம் நீங்கினவளாகி ஏக்கத்துடன் வந்ததை இன்று இத்தெருவில் கண்டேன். ஏன் வீணாகப் பொய் புகலு கின்றனை' என்று வெகுண்டு கூறுகின்றாள் (நற். 20 ) தலைவன் ஒருவன் பரத்தையிற் பிரிந்து வருகின்றான். தலைவி அவனிடத்துச் சினமுடையவளாக இருக்கும் குறிப்பை யறிந்த தோழி 'எம்பெருமானே, பலரும் இகழ்ந்து கூறுதல் பொறாது நீ வெள்கி யுற்ற தன்மைக்கு மகிழா நிற்பேன்; இம்மனையின் கண்ணே வந்து துயில்வது பிறிதொரு பொழுதினும் கைகூடும். ஆதலால்,