பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெய்ர் பெற்றோர் 54! நேற்றைப் பொழுதில் வந்து நின்னை முயங்கிய பரத்தையருடைய புதிய நலனையெல்லாம் கொள்ளை கொண்டாய். இன்று பாணனால் கொணர்ந்து தரப்பெறுகின்ற பரத்தைருடைய மெல்லிய தோளையனையும் வண்ணம் விரைந்து செல்வாயாக; நின்னொடு நின் பரத்தை நீடு வாழ்வாளாக” என்று கூறி வாயில் மறுக்கின்றாள் (நற். 360) - தலைமகனது புறப்போக்கு பற்றி மிகவும் கவல்கின்றாள் தலைவியொருத்தி. எவ்வாற்றானும் அவள் மனம் தலைவனை இல்லத்தினுள் அனுமதிக்க இசையவில்லை. இந்நிலையில் அறிவுடைத் தோழி அவளை நெருங்கிப் பேசுகின்றாள்: பரத்தமை தாங்கவோ இலன்என வறிதுநீ புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை அதுபுலந் துறைதல் வல்லியோரே செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத் தாம்அட் டுண்டு தமிய ராகித் - தேமாழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுந ராகுதல் அறிந்தும் அறியா ரம்மவஃ துடலு மோரே." (வறிது-பயனின்றி; வல்லியோர்-வன்மையுடையோர்; பதம். அரிசி, அட்டு-சமைத்து; திரங்குமுலை-சுருங்கிய முலை; உடலுமோர்-மாறுபடுவோர்) "ஊடல் பொருந்தாது. இதனால் குடும்பத்தினின்று திருமகள் நீங்குவாள். தனியாகத் தலைவி வாழின், குழந்தைகள் மெலிவு எய்தும்; இல்லறமும் வற்றிவிடும்' என்கின்றாள். "பொறுக்க அறியாமையினால் கெட்ட குடிகளை காணாயோ?” என்று எடுத்துக் காட்டுகின்றாள். பொறுப்பதே அகத்தலைவியின் பொறுப்பு என்பது தோழியின் அறவுரை, நல்லுரை. இல்லறப் பிணிப்பிற்குப் பொருட் பிணிப்பு ஒரு காரணம் என்பதைக் கவிஞர் இப்பாடலில் வைத்து அறிவுறுத்துவதைக் காண்க. தலைவனது பரத்தமை எத்தகைய பெண்டிரின் உள்ளத்தை யும் குலைக்கவே செய்யும் என்பது உளவியல் உண்மை தலைவன் முதற் பரத்தையை விட்டு நீங்கி மற்றொரு பரத்தையை நாடும் 39. அகம்-316. (அகச் செய்யுட்களுள் அரியதொரு பாடல் இது: