பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 551 வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பசிதின, அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப நின்னொன் றிரங்குவென் அல்வேன்; தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே." (குருகு-கொக்கு:மடநடை-மெல்லிய நடை: காணிய-காண; அல்கும் - நலியும்; தந்தனை - வழங்கி விட்டு: சென்மோ - போவாயாக! கடல்கெழு மாந்தை அன்ன, எம் வேட்டனை அல்லையால் நலந்தந்து சென்மே." (வேட்டன்ை அல்லையால் - விரும்பியொழுகு வாயல்லை யாயின்). - . இது, முன்னோர் மொழி பொருளைப் பொன்னேபோல் போற்று தற்கு ஒரு சான்றாகவும் அமைகின்றது. 'மாணலம்தா என்ற கருத்து நரிவெரூஉத்தலையார் பாடலிலும் (குறுந்- 236) சாத்தன் பாடலிலும் (டிெ-349) வந்துள்ளமை கண்டு மகிழ்க. (wit). நல்லந்துவனார் நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடவல்ல இக்கவிஞர் கோமான் 38 அகப்பாடல்களின் ஆசிரியர். நெய்தற் அலியில் 33ம்: அகநானூற்றில் ஒன்றும் (43), நற்றிணையில் ஒன்றும் (88), பரி பாடலில் மூன்றுமாக (6, 11, 20) இவர் யாத்த அகங்கள் காணப் பெறுகின்றன. இவர் நெய்தற் கலியை இயற்றியதுடன் அந்நூலில் ஐந்திணைக்கும் உரிய கலிப்பாக்களைக் கோத்தவர். காதலியின் இரங்கலைப் பாடுவதிலும், காம ஆராமையால் தோன்றும் கடந்த செயல்களைப் பாடுவதிலும் தமக்கு நிகர் தானே என்று விளங்கு பவர். அம்மூவனாரும் உலோச்சனாரும் நெய்தல் திணையைப் பாடியவர்கள் எனினும், நெய்தல் சூழ்நிலையில் அதற்குரிய இரங்கலை மட்டிலும் பாடியவர்கள் அல்லர்; புணர்தல் முதலார் 64. ஐங், 159 65. நற். 395