பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 - அகத்திணைக் கொள்கைகள் பிற உரிப் பொருள்களையும் அந்தச் சூழ்நிலையில் வைத்துப் பாடியவர்கள். இவர்தம் பாடல்கள் முதல் கருப் பொருளால் நெய்தல் திணையாகின்றன. நல்லந்துவனாரின் கலிப்பாடல்கள் முதல் கரு உரி என்ற முப்பொருள் களாலும் நெய்தல்களாகின்றன. சங்கப் புலவர்கள் எவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு அகத்திணை யுள் ஒரு பிரிவான பெருந்திணைக்கு இலக்கியம் செய்து கட்டி யவன் நல்லந்துவனார். . இவர்தம் பத்துக் கலிப்பாக்கள் இல்லையாயின் பெருந்திணையின் தன்மைகளை அறிய முடியாமல் தொல்காப்பியத்தில் வரும் பெருந்திணை இலக்கண அறிவுடன் அமைந்து விடுவோம். - இவ்விடத்தில் அகத்திணைப் பாகுபாட்டை நினைவு கூர்தல் சாலப் பொருத்தமாகும். கைக்கிளை நிகழா ஒழுக்கம்; பெருந் திணை கழிபேரொழுக்கம்; ஐந்திணை இயல் பொழுக்கம். களவிலும் கற்பிலும் தலைவியின் வருந்தும் மன நிலைகளைவருத்த உணர்வுகளை-ஐந்திணையின் எல்லைக் கோட்டளவிற்குச் சென்று கவிதைகள் அந்துவனார் புனைவர்; எனினும், பெருந் திணைக் கோட்டினைத் தீண்டாதவாறு நிறுத்திக் கொள்வர். நாணுடை ஐந்திணைத் தலைவியர் காமக் காழ்ப்பால் நாண் துறக்கும்போது பெருந்தினைப் பெண்டிராகிவிடுவர் என்ற திணைத் தன்மையை முன்னரே தெளிந்துள்ளோம்." நல்லந்துவனார் படைத்துக் காட்டும் ஐந்திணைத் தலைவன் களவு வாழ்க்கையில் பெரு விருப்பினன். திருமணத்தை விரைந்து முடித்துக் கொள்ளும் நாட்டமில்லாதவன். இவன் போக்கு தலைவியின் பெற்றோருக்கும் ஊராரின் அலருக்கு அஞ்சும் பெண்ணுள்ளத்திற்கும் சிறிதும் ஒவ்வாது. அவள் பெரிதும் துயருருவாள்; களவில் ஒழுகும் குமரிக்கு ஒரு பெருந்துயர் உண்டெனின் அது வரைவு நீட்டிப்பேயாகும், ஆகவேதான் அந்துவனார் 16 நெய்தற் கலிகளை வரைவுத் துறைகளாகவே பாடியுள்ளார். களவில் இாங்கல் உணர்வை எத்துணையளவு காட்டக் கூடுமோ அத்துணையளவு காட்டியுள்ளார். நெய்தற் கலியில் தரவுப் பகுதிகளை விடத் தாழிசைப் பகுதிகள்தாம் இரங்கல் வளம் மிக்கவை. வரைவு நீட்டிப்பினால் தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குப் புலப்படுத்துகின்றாள்: 66. இந்நூல்-பக். (297-300).