பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 அகத்திணைக் கொள்கைகள் வதற்கும் கவல வேண்டியவன் அவன். அவன் அவை செய்யாது வாளா இருந்தனன். உயர்த்திணைத் தலைமகன் செய்யாது ஒழிந்தவற்றை அவனது கடல் துறையில் வாழும் அஃறிணை நண்டுகள் செய்துகாட்டுகின்றன. தலைமகன் மேனி மெலிவினைக் கண்டு சகிக்காது அவை பொந்துக்குள் நுழைந்து விடுகின்றன. போகாதிருந்தால் உங்கள் துறை மகன் செய்ததைக் காண்” என்று தலைவி கேட்க நேரிடின் நாண வேண்டுமன்றோ? தலைவன் நாண வேண்டிய செயலுக்கு நண்டுகள் நாணின என்று கூறி அஃறிணையை உயர்திணைப்படுத்திக் காட்டி இலக்கியத்தின் தரத்தை உயர்த்துவர் அந்துவனார். இவ்விடத்தில் சில அகத்திணை மரபுகளை நாம் புரிந்து கொள்ளல் இன்றியமையாதது. தலைவன் வரவினை நீட்டிப் பானேயன்றி மறுக்கான்; மறுக்கும் நினைவுடையவனும் அல்லன். இறுதிவரை களவாகவே ஒழுகி இன்புற்றுத் தலைவியைக் கை விட்டு விடுவான் என்பதும் பொருளன்று. அப்படி எண்ணிதான் தோழி வரைவினை நெருங்குகின்றாள் என்பதும் கருத்தன்று. அவன் மணப்பான் என்பதில் ஐயம் கொள்ளாள். ஐயப்படுவதாக மொழிவது அகத்திணையாகாது. ஊரலர் கருதியும், தலைவன் வரும் வழியின் ஏதத்தை நோக்கியும், நொதுமலர் வரவு எண்ணியும் தலைவியின் பிரிவுத்துயர் கண்டும் தோழி வரைவினை விரைந்து முடிக்க விரும்புவாள் என்பதுவே அகத்திணை இலக் கணம். வரைதல் உறுதியாத்லின் களவின்பம் என்னும் துணிவின் பத்தை நீட்டித்து அதனால் பெறும் மகிழ்ச்சியை அடைவதே அவனது ஆர்வமாகும். அலரால் வரும் அவமானத்தையும் வழியில் நேரிடும் இடையூறுகளையும் பிறர் மணம் பேசி விடுவார் என்ற கவலையையும் அவன் பொருட்படுத்துவதில்லை. இவற்றை உளங் கொண்டால்தான் அகத்திணைக் கொள்கையின் உண்மை தெளி வாகப் புலனாகும். r பிரிவுத் துன்பத்தால் உழலும் தலைவி மாலையைப் பழிக் கின்றாள். இத்தகைய பழிப்பினை நெய்தற்கலியின் தாழிசை களில் காணலாம்; இரக்கத் துடிப்பினை - நாடியினை- அங்குக் கேட்கலாம். "வெள்ளத்தில் அகப்பட்டுக் கரையேற மாட்டாத மானினது மருமத்தைப் பார்த்து அம்பு தொடுக்கும் கொடியவர் உண்டா? போரில் தோற்று வருந்துவாரை மேலும் இகழ்ந்து நகுவார் உண்டா? வெந்த புண்ணிலே வேலைச் செருகுவார்