பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 557 திங்களோடே முயலைச் சேர்த்து விழுங்கும்படி அரவத்தை ஏவுவ தாகவும் கூறுகின்றாள். தன்மேலுற்ற காற்றினை நோக்கித் தன் கணவன் இருக்குமிடத்தைக் காட்டாவிடில் தன் கண்ணிரைத் தெளித்து அதன்கண் எழுகின்ற அழலாலே அதன் மேனியைச் சுடு வதாகச் செப்புகின்றாள். கடலை நோக்கித் தன் கணவன் உள்ள விடத்தைக் காட்டாவிடில் தன் காற்புறத்தாலே அதன் நீரை யெல்லாம் இறைத்து வெறும் மணலாகச் செய்து விடுவதாகத் தெரிவிப்பாள் (கவி-144). தலைவியின் கழிபெருங் காமத்தைப் பொறுத்தமான சொற் களால் புலப்படுத்துவர் கவிஞர் கோமான். தன்னுடைய தோளைப் புகழ்ந்து நெகிழ்ந்தவன் நினைவு தவிர நன்று இது தீது இது என்று பாகுபாடு அறியமுடியாத நிலையிலிருப்பதாகத் தலைவி தெளிவாகத் தெரிவிக்கின்றாள். "என் கொழுநன் இரவுக் கனவில் தோன்றினான். கைப்பிடியாகப் பற்றிக் கொண்டு விழித் தேன். பற்றிய கையிலுள்ளே கரந்துவிட்டான்' என்று உளறிக் கொட்டுகின்றாள் (கலி-142). பின்மேகத்தைப் பார்த்துப் பேசுகின் றாள்: ‘'என் காமம் அணுத்தோறும் கலந்தது. உடல் அணுவெல் லாம் கொதிக்கின்றன. சிறிது பொழுது பெருமழை பெய்தாலும் சாலாது, கடல் நீரை முகந்து எப்போதும் கொட்டிக்கொண்டிரு' என்கின்றாள் (கவி-145). ஐந்திணைத் தலைவியிடம் தோன்று வதைப் போலவே பெருந்திணைத் தலைவியிடமும் பிரிவு மெய்ப் பாடுகள் தோன்றும். 'பகலாங்கண் பையென்ற மதியம்போல் நகலின்று நன்னுதல் நீத்த திலகத்தள்’ ‘மேனி மறைத்த பசலை யள்’’ என்ற இரு மெய்ப்பாடுகளைப் புலனாக்குவர் அந்துவனார் (கவி-143). நெற்றிப் பொட்டினையே அழித்துக் கொள்வள் என்பது கரை கடந்த காமப் பேதைமையைக் காட்டும். துதல் கண் முலை முதலான சில உறுப்புகளில் பசலை படரும் என்று கூறாது மேனி முழுதும் பசலைப் போர்வை கொண்டனள் என்பன அவள் தன் காமப் பித்தினைப் பறை சாற்றும். அந்துவனாரின் பெருத்திணைப் பாக்கங்களின் இறுதியடி களை ஆழ்ந்து சிந்தித்தால் பெருந்திணை ஐந்திணையாதலைக் கண்டு மகிழலாம். பிரிந்த காதலன் மீண்டும் வீடு வந்து சேர்ந் தான், தலைவி அவன் மார்பை அணைந்து காமம் தணியப் பெற்று கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள் (கலி-142), மலை பல கடந்து சென்ற தலைவன் மீண்டு வந்ததும் காமம் அருளி இழந்த நலத்தை இனிய அகமகிழ்ச்சியோடு எய்தினள் (கலி-143),