பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 551 பாடல்களை ஒரே மூச்சில் படித்தால் தாயின் உள் ளோட்டங்களைப் புதிர்க் 455 it (x-ray) படங்கள் போல் தோன்றக் காணலாம். தன் அருமை மகளின் உடன் போக்கைத் தாய் ஒப்புகின்றாள், 'அறன் நெறி இது எனத் தெளிந்த மகளைப் போற்றுகின்றாள்; தன் மகள் செல்லும் பாலை வழி மழை பெய்து இனியதாகுக என்று வாழ்த்துகின்றாள் (371). மகளின் செலவுக்கு அவள் வருந்தவில்லை. உண்மையை முன்னதாகச் சொல்வியிருப்பின் நம் இல்லத்திலேயே வதுவை நிகழ்விப்போமே. அப்படி நிகழ்ந்திருப்பின் அவளுக்கும் இன்பம், ஆய மகளிர்க்கும் பேரின்பம். இப்பொழுதோ தலைவனுடன் புணர்ந்து செல்லுதலால் வரும் ஓரின்பமேயன்றி ஆறிடையூற்றான் அவட்கும் துன்பம்; அந்நம்பிக்கும் துன்பம்; நமக்கும் எல்லையிலாத் துன்பம், என்று நொந்து கொள்ளுகின்றாள் (379). முடியகம் புகாக் கூந்தலள், கடுவனும் அறியாக் காடிறந் தோளே என்று அவள் இளமையை நினைந்து இரங்குகின்றாள் (374). இதுவெண் பாவைக் கினியதன் பாவை இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி இதுவைன் பூவைக் கினியசொற் பூவையென் றலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல் காண்டொறும் கண்டொறும் கலங்கி நீங்கினளோ (375) என்று சொல்லிக் கவல்கின்றாள். 'என் மகள் உடன் போதற்கு அவள் காரணம் இல்லை; அவனும் காரணம் ஆகான்; நானும் காரணம் இல்லை. பின் யார் காரணம்? 'அறன் இல் பாலே" என்று விதியை வெகுண்டு உரைக்கின்றாள் (376). காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கை இற்றையார்க்குப் போலப் பண்டைத் தமிழர்க்கும் இருந்தது. ஆகலின், உடன்போகிய காளையும் அஞ்சில் ஒதியும் வரக் கரைவாய் நினக்கும் நின் சுற்றத்தினர்க்கும் ஊனுடை உணவைப் பொற்கலத்தில் படைப்பேன் என்று சிறு கருங் காக்கையை வேண்டுகின்றாள் (391). சிலம்பு கழி நோன்பு தலைவன் வீட்டில் நிகழினும் வதுவை நன் மணம் தன் இல்லத்தில் நிகழவேண்டும் என்பது ஒரு தாயின் விருப்பம் (399). பெண்ணின் தாய்க்கும் விடலையின் தாய்க்கும் எதிருணர்ச்சி இயல்பாகச் சமுதாயத்தில் இருப்பதை இன்றும் காணலாம் அகவிலக்கியத்தில் தலைவியின் பெற்றோர் இடம் அ-36