பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அகத்திணைக் கொள்கைகள் பார்த்து உண்பதற்கு நஞ்சைத்தேடி வைத்திருந்தாள். அருளுடையான் ஒருவன் அந்த நஞ்சினை எடுத்து மறைத்து விட்டான். அப்பெண் நஞ்சினைத் தேடும்போது அஃது அவளுக்குக் கிடைக்கவில்லை. அவளும் அதனை உண்டு சாகாமல் உயிர் தப்பினாள். இவ்வாறு அவளை உயிர் தப்புவிக்கச் செய்யப் பெற்ற களவு நல்லதாயிற்று. காமம் நல்லது என்பதற்கும் அவர் ஓர் எடுத்துக்காட்டு தருகின்றார். காமம் என்பது ஆசை. ஒருவர் சுவர்க்கத்தின் சென்று போகம் துய்ப்பல் என்று கூறுவதும், உத்தரகுருவின்கண் சென்று போகம் துய்ப்பல் என்று மொழிவதும், நன்ஞானம் கற்று வீடு பெறுவல் என்று செப்புவதும், தெய்வத்தை வழிபடுவல் என்று சொல்லுவதும் காமத்தின் பாற்பட்டவையே. இவ்வகைக் காமம் இம்மையில் மேன்மக்களாற் புகழப்படுகின்றது: மறுமைக்கும் உறுதி பயக்கின்றது. ஆகவே, இது நல்லது. இளம் பூரணரும், களவு என்னும் சொற் கண்டுழியெல்லாம் அறப்பாற் படாதென்றல் அமையாது. களவாவது பிறர்க்குரிய பொருளை மறையிற் கோடல். இன்னதன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது. கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாமல் நிற்றலால் இஃது அறமெனப்படும்' என்று விளக்குவர். - காமப் பருவம் எய்திய நங்கை யொருத்தியும் குமரப்பருவம் எய்திய நம்பி ஒருவனும் சந்திக்கின்றனர். இருவர் கண்களும் 'நட்புக் கொள்ளுகின்றன: காதலாடுகின்றன; காமத்தி பற்று கின்றன. கண்டதும் காதல் என்று மக்கள் கூறுவதும் இதுவே யாகும். குப்பைக் கோழியார் என்ற குறுந்தொகைப் புலவர் இதனைக் கண் தரவந்த காம ஒள்ளெரி' என்று காமத்தின் பிறப்பிடமாகக் கண்ணைக் கூறுவர். சிக்கிமுக்கிக் கற்கள் இரண்டும் சேர்ந்து தீ உண்டாவதாகக் கூறுவர் அறிவியலார். அதுபோலவே கண்ணும் கண்ணும் சேர்ந்து காமத்தியை உண்டாக்குவதாகக் குறிப்பர் இச் செந்நாப் புலவர். கல்லில் பிறந்த தி பஞ்சு முதலான விரைவில் தீப்பற்றும் பொருள் இல்லையாயின் வளராது. கண்பிறப்பித்த காமத் தீயோ தானாகவும் வளரவல்லது என்பதை ஒள்ளெரி என்ற சொற்றொடர் குறிக்கின்றது. தொல் காப்பியரும், . 3, களவியல்-அவதாரிகை, 4. குறுந் 305