பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவு பற்றிய விளக்கம் 41. நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்." (அறிவுடம்படுத்தல்-இருவரது அறிவினையும் ஒருப் படுத்தல்) என்ற நூற்பாவால் குறிப்பர், ஒன்றுபட்ட உள்ளக் குறிப்பினை இருவர் கண்களும் பரிமாறிக் கொள்ளுகின்றன. காதற்களத்தில் கண்ணுக்குரிய மதிப்பு வாய்க்கு இல்லை. "வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' என்று இதனைச் சுருக்கமாக விளக்குவர் வள்ளுவப் பெருந்தகை. பருவம் நிரம்பிய ஆண்மையும் பெண்மையும் பார்த்ததும் உள்ளம் ஒன்றிக் காமப் பித்தேறுவதன் காரணம் யாது? உளவியலார் பாலுந்தல்' (Sex drive) என்று கூறுவர். எண்ணற்ற நம்பியரும் நங்கையரும் நாடோறும் சாலையிலும் சோலையிலும் இளமரக் காவிலும் சினிமாக் கொட்டகையிலும், பிற இடங் களிலும் காண்கின்றனர். என்றாலும், யாரோ ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கின்றான்; யாரோ ஒருத்தி ஒருவன்மீது கண் வீசுகின்றாள். பலரை விலக்கி ஒருவரைத் தேர்ந்து விழையும் இச்சிறப்புப் பார்வை ஆய்தற்குரிய அரிய சிக்கலாகும். எனினும், நம் முன்னோர் இதற்குக் காரணம் காணவும் முனைந்தனர். ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப." - *...* (பால்-ஊழ்) என்ற நூற்பாவால் காரணம் காட்டி விளக்குவர் தொல்காப்பியர். நல்லுழின் ஏவலால் காட்சி நிகழும் என்பது அப்பேராசிரியரின் கருத்தாகும். கிழவனும் கிழத்தியும் காண்ப' என்று இருவரையும் எழுவாயாக வைத்துக் காட்டும் சிறப்பால் முன்னதாகக் காதலித்தவர் யார் என்ற வினாவுக்கு இடம் வைக்கவில்லை என்பது சிந்திக்கத் தக்கது. இப் பாலதாணையை சங்கப் புலவர் களும் ஒப்புக் கொண்டதைக் காண்கின்றோம். 5. களவியல்-5 6. குறள்-1100 7. களவியல்-2,