பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-33 உவமையால் பெயர் பெற்றோர் சங்கச் சான்றோர்களாகிய சில அகத்திணைப் புலவர்களின் பெயர்கள் அறியக் கூடவில்லை. தன்னலமற்றுத் தம்மையும் மறந்து, தம் பெயர்களைக்கூடக் குறிப்பிடாது சென்றவர்கள் சிலர். இவர்தம் பாக்களைப் பயின்று, அப் பாக்களில் வரும் உவமையினை உணர்ந்து, அவற்றால் அவர்கட்குத் திருநாமம் சாத்திய பெரு மக்களின் நன்றி மறவாத புலமை நலத்தைப் போற்றுவோம்; நாமும் புகழ் பெறுவோம். இங்ங்ணம் உவமை யால் பெயர் பெற்றோர் பதிநால்வர். (). அணிலாடு முன்றிலார் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவு இழந்த வேறுபாட்டைக் கண்டு கவல்கின்றாள் தோழி. அதற்குச் சமாதானம் கூறுவதாக அமைகின்றது தோழியின் பேச்சு. இயல் பாகவுள்ள சிறப்போடு மிகுதியான சிறப்பை விழாக் காலத்தில் ஒருர் கொண்டிருக்கும். அங்ஙனமே தலைவன் தன்னருகில் இருக்கும்போது தன் இயற்கை நலங்களோடு சிறப்பாக விளக்கம் பெற்றிருப்பதாகக் கூறுகின்றாள் தலைவி, வெம்மையின் கொடுமைக்கும் ஆறலை கள்வர்களின் ஏதத்திற்கும் அஞ்சி ஊரினர் வேற்றிடம் சென்றால் அவ்வூர் பொலிவிழந்து நிற்கும். தலைவன் தன்னை விட்டுப் பிரிந்துள்ளபோது தனிமையுள்ள வீட்டைப் போன்று தான் பொலிவிழந்து வருந்துவதாகக் கூறு கின்றாள் தலைவி. அத்தம் நண்ணிய அங்குடிச் சீறுார் மக்கள் போகிய அணிலாடுமுன்றில்