பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 அகத்திணைக் கொள்கைகள் புலம்பில் போலப் புல்லென்(று) அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே" (அத்தம் - பாலை நிலம்; நண்ணிய - பொருந்திய; சீறுரர் - சிறிய ஊர்; முன்றில் முற்றம்: புலம்பு - தனிமை; இல் . வீடு; புல்லென்று - பொலிவிழந்து) என்பது தலைவி கூற்று. அணில்கள் பேரச்சம் உடையவை; தாம் ஏறி மகிழும் மரத்தின் கிளைகள் சிறிது அசையினும் அஞ்சும். மக்களோ பிறஉயிர்க ளோவருவதை உணரின் ஒடிஒளியும்இயல்பின. மக்கள் நிழலைக்காணினும் அவை மருண்டு ஓடும். ஆதலின்மக்களோ பிற உயிர்களோ பயிலும் இடங்களில் அவை இயங்கா. இவ்வாறு அஞ்சும் இயல்புடைய அணில்கள் பல கூடி அச்சமற்று ஆடி மகிழும் என்றால் அவ்விடம் மக்கள் வாழ்விழந்த வெற்றிடமாதலே வேண்டும். இத்தகைய இடமே அனிலாடு முன்றில் புலம்பில்’. இந்த அழகிய உவமை அமைத்த சிறப்பால் இப்புலவர் பெருமான் அணிலாடு முன்றிலார் என்ற சிறப்பான திருநாமத்துடன் பெருமை பெற்றுத் திகழ்கின்றார். (ii) ஒாேர் உழவனார் தலைவன் தான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தலைவியை விட்டு நெடுந் தொலைவிலுள்ள ஓரிடம் சென்றான். முயற்சி முற்றுப் பெற்றபின் தன் ஊர் திரும்ப நினைக்கின்றான். உடனே செல்ல வேண்டும் என விரைகின்றான். இவ்விரைவைக் விஞர் ஓர் உழவனை உவமை கூறி விளக்குகின்றார். - ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோள் பேரமர் கண்ணி இருந்த ஊரே நெடுஞ்சேண் ஆரிடை யதுவே: நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத் (து) ஒரேர் உழவன் போலப் பெருவிதுப்பு உற்றன்று நோகோ யானே.” (ஆடு - அசைகின்ற அமை - மூங்கில்; புரையும் - ஒத்த: வனப்பு - அழகு; பணைத்த - பருமையை உடைய, கண்ணி