பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அகத்திணைக் கொள்கைகள் பால்வரைந் தமைத்தல் அல்லது அவர்வயின் சால்பளந் தறிதற்கு யாஅம் யாரோ." அமைத்தல்-வரை (பால்-ஊழ்வினை; வரைந்து - யறுத்துப் பொருத்தப்படுதல்; சால்பு-தகுதி அளந்துவரையறுத்து. . . . . . - என்று கூறுவர் பேரி சாத்தனார். காப்பு மிக்கதனால் வேறுபட்ட தலைவியின் நிலைகண்டு அதற்குக் காரணம் கேட்ட செவிலிக்குத் தலைவி கூறுவது இது. அறத்தொடு நிற்றல் என்பது துறை. அம்மூவனாரும், • பிறிதொன் றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே.” (பால்-ஊழ், தெய்வம்: பிறிதொன்று ஆக-வேறொரு வகையாக) என்று மொழிவர். இது நொதுமலர் வரைவின்கண் தோழி அறத்தோடு நின்றதாகும். ஊழ் குலமகளிர்க்கு ஒருவனைத் தலை வனாக்கிய பின்னர் மற்றொருவனைத் தலைவனாக்கும் ஆற்றலுடையதன்று என்கின்றாள் தோழி. காதற் பாங்கை அழுந்த ஆய்ந்த மோதாசனார் என்ற மற்றொரு குறுந்தொகைப் புலவர், இவனிவள் ஐம்பால் பற்றவும் இவனிவன் புன்தலை ஒரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஒதில் சிறுசெரு உருப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர் பிணையல் அன்ன விவர் மணமகிழ் இயற்கை காட்டியோயே..' (ஐம்பால்-கூந்தல்; ஒரி-ஆண் தலைமயிர்; வாங்குநள். வளைத்து இழுப்பாளாய்; பரியவும்-ஒடவும்; தவிர்ப் பவும்-தடுக்கவும்; செரு-சண்டை; துணைபிணையல்இரட்டை மாலை; இயற்கை-இயல்பு; நல்லைநன்மையை யுடையாய்) سامسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسه 3. குறுந், 366. 9. ஐங்குறு-110 10, குறுந். 229,