பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையால் பெயர் பெற்றோர் 585 இருவர் திறத்தும் இரக்கமுடையவள் என்பதைப் புலப்படுத்து கின்றாள். இவ்வுமையால் இரண்டு மகவினுக்கும் ஒருங்கே நஞ்சு தீர்க்கும் மருந்து தருதலே தக்கதாகின்றது. அது போலவே, தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் நன்மை தரும் வரைவே ஏற்புடைத்து என்பதைப் பெற வைக்கின்றாள். கவை மகனின் செய்தியை உவமையாக எடுத்தாண்ட சிறப்பால் இயற்பெயர் மறைந்த இப் புலவரை அவர் கூறிய உவமையையே பெயராக ஆக்கி மகிழ்ந்தனர் அக்கால அறிவுடையோர். புலவரும் கவைமகன் என்ற சிறப்புப் பெயருடன் திகழ்கின்றார். (vi.) a rase ó na sonuri தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப பொருள் தேடச் செல்ல எண்ணுகின்றான் தலைவன். பிறகு வாழ் நாளது சிறுமையையும் இளமையின் அருமையையும் கருதிச் செலவு தவிர் கின்றான். இவன் தன் நெஞ்சிற்கு உணர்த்தும் வகையில் குறுந் தொகைப் பாடல் அமைகின்ற்து. - இருங்கண் ஞாலத்து ஈண்டுபயப் பெருவளம் ஒருங்குடன் இயைவ தாயினும் கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின் றன்ன வாலெயிறு ஊறிய வசையில் தீநீர்க் கோலமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கிற் பிரியார்; நாளும் உறன்முறை மரபின் கூற்றத்து அறனில் கோள்நற் கறிந்தசி னோரே," இருகண் - பெரிய இடம்; ஞாலம் - பூமி: ஈண்டு பயம் - தொக்க பயனையுடைய; பெருவளம் - பெரிய செல்வம்: இயைவது - பொருந்துவது: கால் எறி - அடிப் பகுதியில் வெட்டிய கடிகைக்கண் - துண்டத்தை அயின்றன்ன - உண்டாற் போன்ற, வால் எயிறு - வெள்ளிய பல்; வசை இல் - குற்றமற்ற கோல் அமை - திரட்சி அமைந்த: 6 டிெ. 267