பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையால் பெயர் பெற்றோர் 589 இந்த அழகிய உவமையை அமைத்த புலவரும் குப்பைக் கோழி யார் என்ற அழகிய பெயரைப் பெற்றுத் திகழ்வாராயினர். (vi). கூவன் மைந்தன் யாதோ ஒரு நிமித்தத்தின் பொருட்டுத் தலைவன் வேற்று நாடு சென்றிருந்தான். அதனால் தலைவி பெருந்துயருற்று வருந் தினாள். தனித்துறையும் தன்துயர் கண்டு வருந்திலள். இவள் தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி. ஏதமின்றி இனிது திரும்ப வேண்டுமே என்பதுதான் அவள் கொண்ட வருத்தம், உறக்கமின்றி உறுதுயர் உற்றனள். தலைவியின் நிலை கண்டு அவள் ஆருயிர்த்தோழியும் துயர் உறுவாளாயினள். இது தலைவிக்கு வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போலாயிற்று. 'என் துயரை ஒருவாறு ஆற்றினும் ஆற்றுவன்; தோழியின் துயர் நிலையைக் கண்டு உளம் பொறாது அழுவதன்றி அதைத் துடைக்கும் ஆற்றல் இல்லையே' என வருந்துகின்றாள். இந் நிலையை விளக்கும் குறுந்தொகைப் பாடல்: கவலை யாத்த, அவல நீளிடைச் சென்றோர் கொடுமை ஏற்றித், துஞ்சா நோயினும் நோயா கின்றே கூவல் குரா ஆள் படுதுயர் இனாவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே.'" (கவலை யாத்த-கவர்த்த வழிகளில் யா மரங்களையுடைய; அவலம்-துன்பம்; நீள்இடை-நீண்டவழி, எற்றி-நினைந்து: நோய்ஆகின்று-மிக்க துன்பமாகின்றது; கூவல்-கிணறு: குரால்ஆன்-குரால் நிறமுள்ள (பலவித புள்ளிகளையுடைய) பசு உயர்திணை ஊமன்-ஊமையாக இருப்பவன்; பொறுக் கல்லேன்-பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன்) ஒரு நல்ல பசு, இராக் காலத்தில் கிணற்றில் விழுந்துவிட்டது. இதனை ஓர் ஊமன் கண்ணுறுகின்றான். குரலிட்டுப் பிறரை உதவிக்குக் கூவி அழைக்கமுடியாத நிலை. இருட்காலமாதலால் 10. டிெ-224