பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையால் பெயர் பெற்றோர் 593 கைவிடுதல் அறியாமை மட்டும் அன்று நம் செயல் பிறரால் இகழ வும்படும். ஆகவே, விரைந்து எதனையும் முடிவு செய்து விடாதே' என்று கூறும். இந்தப் போராட்டத்தால் உடம்பு நலிவது தானா?” என்று எண்ணுவான் தலைவன். இந்நிலையை நற்றிணை, 'புறந்தாழ்பு இருண்ட கூந்தல், போதின் நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிகொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம்’ என்னும்; செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யா மையொடு இளிவுதலைத் தரும்என உறுதி துரக்கத் தூங்கி அறிவே சிறிதுநணி விரையல்’ என்னும்; ஆயிடை ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரி பழங்கயிறு போல - iவது கொல்லென் வருந்திய உடம்பே. . (புறம் - பின் புறம்; தாழ்வு - தாழ்ந்து: செல்லல் - துன்பம்: தீர்க்கம் - தீர்ப்போம்; எவ்வம் - இகழ்ந்து விட்டு விடுதல்; எய்யாமை - அறியாமை; இளிவுதலை - இகழ்ச்சியை: உறுதி - உறுதிப்பாடு; துர்க்க - ஆராய, விரையல் - விரை யாதே; மருப்பு - யானைக் கொம்பு, வீவது - அழிவது) என்று விளக்குகின்றது. இந்தத் தலைவனின் நிலை ஓர் அழகான உவமையினால் விளக்கப்பெறுகின்றது. இரண்டு பெருமதக் களிறு களின் போராட்டத்திற்கு இடையே அகப்பட்டுக் கொண்டது ஒரு கயிறு, அதுவோ பழங் கயிறு, நைந்து தேய்ந்து போன புரிகளைக் கொண்ட கயிறு. களிறுகள் அவற்றைப் பற்றிக் கொண்டு ஈர்ப் பதனால் புரிகள் ஒன்றன்பின் ஒன்றாக அறுந்து கொண்டே வரத் தொடங்குகின்றன. இந்தக் கயிற்றினைக் காதல் உணர்வும் கடமை உணர்வும் மாறுபட்டுப் பொரும் நிலைக் களனாக அமைந் துள்ள உடலுடன் ஒப்பிடுகின்றார் கவிஞர். கயிறு போல உடலும் அழிய வேண்டியது தானா என்பது தலைவனின் கூற்று. இந்த அருமையான உவமையினை அமைத்த கவிஞர் தாம் அமைத்த உவமையாலேயே தேய்புரி பழங் கயிற்றினார் என்ற பெயரால் திகழ்வாராயினார். SASAMAeeA SAeAAASAAAA .3. டிெ, 284, அ.-38 .