பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையால் பெயர் பெற்றோர் . 599 ஒன்றிலேயே செந்நெல் அரிசியாலாய சோற்றையும், தூய வெண்ணிற நெய்யையும் பெற்று வயிறார உண்டு, பனிக்காலத்தே விரும்பிக் குடித்தற்கு வெப்பம் பொருந்திய நிரையும் செப்புக் கலத்தில் வேண்டும் அளவு பெற்று மகிழ்வீராக’’ என்கின்றாள். இந்நிகழ்ச்சி தாங்கிய குறுந்தொகை ஒவியத்தைப் பிறிதோ ரிடத்தில் காண்க. இப்பாடலில், பல வீடுகளில் சென்று ஐயம் பெற்றுண்ணும் இரவலரது பிச்சை போலாது அறிவர் பெற் றுண்ணும் உணவு ஒரு வீட்டில் பெறும் உணவு ஆதலின் ஒரில் பிச்சை என்று சிறப்பிக்கப் பெற்றது. இதனால் நயம் செறிந்த இத் தொடரை அமைத்து இப் பாடலை இயற்றிய புலவரை ஒf ல் பிச்சையார் என்று அக்காலச் சான்றோர் வழங்குவா ராயினர். (iii). கங்குல் வெள்ளத்தார் தலைவன் யாதோ ஒரு காரணம்பற்றி தலைவியை விட்டுப் பிரிந்து வெளி நாடு சென்று விட்டான். தலைவி தனித்து வாழ் கின்றாள். ஒரு நாள் மாலை; மாலைக் காட்சிகள் தன் மனத் துயரைத் தூண்டி விட்டதாக வருந்தி நிற்கின்றாள். அருகிலிருந்த ஆருயிர்த் தோழி ஆற்றியிருப்பதே மகளிர்க்கு அறம் ஆகும் என் பதை நன்கு அறிந்தவள்; அவள் கூறுவாள்; "மாலைக் காட்சி களால் மதிமருண்டு மனத்துயர் கொண்டு வருந்துவது மகளிர்க்கு அழகன்று; ஆற்றியிருத்தலே அறமாகும்’ என்கின் றாள். அதனைச் செவிமடுத்த தலைவி ஆற்றியிருக்கவே நான் விரும்புகின்றேன். ஒருவாறு இம் மாலையைக் கழித்துவிட்டாலும், இம்மாலையைத்தொடர்ந்து வரும் இரவு, கங்குல், எல்லை காணா நிலையினது. அதிகத் துன்பம் செய்யவல்லது' என்று தன் உள்ளத் தினைத் திறந்து காட்டுகின்றாள். இந்நிகழ்ச்சியைச் சித்திரிக்கும் குறுந்தொகைப் பாடல்: எல்லை கழிய முல்லை மலரக் கதிர்சினம் தனிந்த கையறு மாலை உயிர்வரம் பாக நீந்தின மாயின் 3. இந்நூல் பக். 395,