பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயஞ்செறிந்த தொடரால் பெயர் பெற்றோர் 601 முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறையிறைப் புதல்வரொடு மறுவந் தோடி முன்னாள் இனிய தாகிப் பின்னாள் அவர் தினை ப்புனம் மேய்ந்தாங்குப் பகையா கின்(று) அவர் நகைவிளை யாட்டே." (இருபிடி-கரிய பெண்யானை, கயதலை; மெல்லிய தலை: நறவுகள்: மலி-மிக்க; குறி இறை புதல்வர்.குறிய கைகளை யுடைய பிள்ளைகள்; மறுவந்து ஓடி-சுற்றி ஒடி மேய்தந் தாங்கு-மேய்ந்தாற் போல) . - இதில், “குறவர் குழந்தைகளோடு விளையாடி மகிழ்ச்சியை விளை வித்த யானைக் கன்று பின் அவருக்குரிய தினையை உண்டு அவருக்குத் துன்பத்தை விளைவித்தது போல முன்னாள் நின்னோடு அளவளாவி மகிழ்ந்த தலைவனது நட்பு அப்பொழுது இன்பத்தைப் பயந்து இப்பொழுது நின் அழகு கெடுவதற்கு ஏது வாயிற்று” என்று இயற்பழிக்கின்றாள். தலைவனைத் தோழி பழிக்கும் அளவிற்குத் தன் ஆற்றாமை துணையாயிற்றே என்பதை அறிந்து அஞ்சும் தலைவி உள்ளம் தெளிந்து உறுதி கொள்வாள் என்பதற்காகவே தோழி இந்த உத்தியைக் கையாளுகின்றாள். தலைமகளைத் தேற்றுவதற்காகவே தலைவனைப்பற்றிச் சிறிது வன்சொல் வழங்குகின்றாள் தோழி. இதனால்தான் குறவர் செயலைக் குறிப்பிடுகின்றாள். ஆயினும், தலைவனை வெறுத்தல் வேண்டும் என்ற கருத்தினள் அல்லள் தோழிக்கு அது கருத்தன்று என்பதை அறிவிக்கவே, குறச் சிறுவர்களை குறுகிய முன்கையினர்-குறியிறைப் புதல்வர்-என்று குறிப்பிட்டார் கவிஞர். குறுங்கையர்பால் பேரறிவு காணல் அரிது: பேரறி அடையார் நீண்டகைகளைப் பெற்றிருத்தல் இயல்பாகும். குறவர் செயல் அறச் செயலற்றது. அவர் செயல் நமக்குப் பொருந் தாது' என்பதைக் குறியிறை என்ற ஒரு சொற்றொடராலேயே விளங்க வைத்தார் கவிஞர். இதனால் இப்பாடலை இயற்றியவர் குறியிறையார் என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்பெற்றார். 5. ഒ്.-394