பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 2 சில முக்கிய துறைகளின் விளக்கம் அலர்: பக்-97 அல்ல குறிப்படுதல்: பக் (94-96) அறத்தொடு றிற் றல்: பக் (155-169) இடந்தலைப்பாடு: பக் (56-65) இயற்கைப் புணர்ச்சி: பக் (48-55) இரவுக்குறி: பக் (91-94) இரவுக்குறி இடையீடு: பக் (96-97) இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்: பக் (86-87) இற் செறிப்பு : புணர்ச்சியால் தலைமகளின் உடல் வேறுபாடு கண்டு, தலைவனைச் சந்திக்க இடமின்றிப் பெற்றோர், தலைவியை (அவள் வயது முதிர்ச்சியை நோக்கி) வீட்டினுள் இருத்துகை யாகும். இரவும் பகலும் தாய் தந்தையின் கடுங் காப்புக்கு இல்லக் குமரியை உள்ளாக்குவது தமிழர் நாகரிகமாகும். ஒருகால் பெற்றோர் இசைவு பெற்று வெளிச் செல்லினும் விடாது தோழியும் உடன் செல்வாள். மகளிர் உணவு விடுதியிலுள்ளவர்கள் வெளிச் செல்ல நேருங்கால் இருவர் அல்லது மூவர் சேர்ந்து செல்லும் மரபினை விடுதிக் காப்பாளர் (Warden) அமைத் துள்ளமை ஈண்டு எண்ணத் தக்கது. எ-டு: குறுந். 141, 401; திருக் கோவை-133. - - உடன் போக்கு: பக் (180-192) ஒருவழித் தணத்தல்: பக் (169-190) ஒம்படை: பக் 184 கழறி உாைத்தல் : கழறுதல் என்பது அன்புடையார் மாட்டுத் தீயன கண்டால் அவ்வன்பில் தலைப் பிரியாத சொற்களால் நெருங்குவது. கழறுதல் - இடித்துரைத்தல்; கழறுமாறு: குன்றம் உருண்டாற் குன்றி வழியடையாகாதவாறு போலவும், யானை தொடுவுண்ணின் மூடுங்கலம் இல்லது போலவும், கடல் வெதும்பின் வளாவுநீர் இல்லது போலவும், எம்பெருமான், நின் உள்ளம் அறிவு நிறை ஒர்ப்புக் கடைப்பிடியின் வரைத்தன்றிக் கைம்மிக்கு ஒடுமே யெனின் நின்னைத் தெருட்டற் பால நீர்மையார் உளரோ? இப் பெற்றியாய நீ இன்னதோர் இடத்து இன்னதோர் உருவு கண்டு