பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 609 என் உணர்வு அழியப் போந்தேன்' என்றல் தக்கின்று எனல். (இறை. 3-ன் உரை). எ-டு: திருக்கோவை-20; நற். 95; குறுந் 184, 206. - கமுற்றெதிர்மறை இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவன் ஆற்றானாய்ச் சொல்லும் சொற்கள் கழற்றெதிர்மறை" என்ற துறையாகப் பேசப்பெறும். கழறுதல்-பாங்கன் இடித் துரைத்தல். எதிர்மறை-தலைவன் எதிர்மறுத்துரைத்தல். நண்ப, என்னாற் காணப்பெற்ற வடிவை நீ கண்டிலை; கண்டனை யாயின் இங்ங்ணம் கழறாய்' என்று மறுத்துரைத்து வருந்தா நிற்பன் எ-டு: திருக்கோவை - 23; குறுந் 58. கற்பொடு புணர்ந்த கெளவை : தலைவி தலைவனுடைய உடைமையாய்க் கற்பொடு கூடியிருத்தலை அயலார் விரவிய சேரியினர் பலரும் அறிதல். கவ்வை - அலர். இது செவிலி புலம்பல் முதலாகச் செவிலி பின் தேடிச் சேறல் ஈறாக ஐவகைப் படும் (தஞ்சைவாணன் கோவையில் விளக்கம் காண்க). காமம் மிக்ககழிபடர் கிளவி :காமம் மிக்க-(பிரிவினால்) காதல் விஞ்சுவதனால், கழி - மிக படர் - துன்புறுகின்ற; கிளவி - சொல் என்பது இதன் பொருளாகும். தலைமகனைக் கானலுற்று வருந்தா நின்ற தலைமகள் தனது வேட்கை மிகலாம் கேளாதன வற்றைக் கேட்பனவாக விளித்து... கூறா நிற்றல் என்பர் பேரா சிரியர் (திருக்கோவை - 174ன்உரை). அதாவது, காமம் மிக்க தனாலுண்டாகிய பெருந் துன்பம் காரணமாகக் கேட்டலும் அதற்கு மறுமொழி கூறலும் இல்லாத புள் முதலியவற்றை நோக்கிக் கூறுதல். அவ்வகை வேட்கையளாய் நின்று புன்னைக் கானும் அன்னத்திற்கானும் கடலிற்கானும் கழிக்கானும் அவ்வகை பிறவற்றிற்கானும் தன்கட் பொறை தணிப்பனவாகச் சிந்தித்துச் சொல்லுவதாயிற்று......இதனைத் தலைமகன் கேளா வருமே எனின், இங்ங்ணம் வந்தொழுக இவள் ஆற்றாளாம் என்று ஒரு வகையின் முற்பட்டுப் பிற்றைஞான்று வரைவொடு புகுவானாம்; தோழி கேட்குமேயெனின், தலைமகனை முன்னின்று வரைவு கடாவுவாளாம்; யாருங் கேட்பாரில்லை யெனின், ஆற்றுதலைப் பயக்கும். என்னை, மூடி வேவா நின்றதோர் கலத்தை மூய்திறந்த விடத்து அகத்து நின்ற வெப்பம் குறைபடும்; அதுபோல இவட்கும் அயர்வுயிர்ப்பாம், அச்சொற்கள் புறப்படுதலான் என்பது. இம் மூன்றினுள் ஒன்றாகாமை இல்லை என்பது. தலைமகன் கேட்பின் அ-39