பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூது விடுதல் இத்துறையாகும். தோழனை, அல்லது தோழியை -மேகத்தை - கிளியை-வண்டை-குயிலை - நாரையை இன்ன பிறவற்றை, அன்றித் தன் நெஞ்சை, தூது செல்லச் சொல்லிப் பேசும் துறை இது. கடமை காரணமாகக் காதலியைப் பிரிந்து சென்ற காதலன் கடமையை முடித்துக் கொண்டு திரும்புகின்றான் வீடு நோக்கி. தேர் பறந்துதான் வருகின்றது; மனவேகத்துடன் போட்டி போட முடியவில்லை. மேலே பறந்து ஒடிக் கொண்டிருக்கும் முகிற் கூட்டங்களை நோக்கி அவற்றைத் தூது விடுகின்றான். இது பறறி நந்திக் கலம்பகத்தில் ஒரு பாடல்: ஒடுகின்ற மேகங்காள்! ஓடாத தேரில் வெறும் கூடு வருகுதென்று கூறுங்கோள்!-நாடியே நந்திச்சி ராமனுடை நன்னகரில் நல்துதலைச் சந்திச்சிர் ஆமாகில் தான். 'ஓடுகின்ற மேகங்களே! ஓடாமல் ஆமைபோல் நகர்ந்து வருகின்ற தேரில் ஒரு வெறுங்கூடு வருகின்றது என்று என் காதலிக்குச் சொல்லி வையுங்கள் என்று கூறுகின்றான் தலைவன். நாணிக் கண் புதைத்தல்: வெட்கிக் கண்களைப் பொத்திக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். காதலி வெட்கத்தால் கண்களை மூடிக் கொள்ளுகின்றாள். ஏன் இப்படி? வேண்டாம் இது; கண்களைத் திற” எனக் காதலன் கூறும் கூற்றே 57ಾಗಿಕ கண் புதைத்தலாகும். ஒரு துறைக் கோவை என்பது ஒரு gré 400 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் கொண்டது; முழுதும் "நாணிக் கண்புதைத்தல் என்ற ஒரே துறைபற்றிய பாடல்களே. இவற்றில் ஒரு பாடல்: ஆவியும் பூவும் தகரமும் தேனும் அணிந்துநறு நாவியும் சேர்குழ லீர்!தள வாய்ரகு நாதன்வரைக்