பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 அகத்திணைக் கொள்கைகள் வாயில் வேண்டல்: ஏதோ ஒருவகையால் பிணங்கியிருக்கும் தலைவியை அடைதற் பொருட்டு அவளை இணங்கச் கெய்யுமாறு தலைவன் தோழியை வேண்டல். சில சமயம் பாணனைத் துதாக விட்டும் வாயில் வேண்டுவான். வாயில்-துTது, எ-டு; குறுந். 33. வெறியாட்டு: பக் (123-134) வெறிவிலக்கு: தலைவியின் மன வாட்டத்தையும் உடல் வேறுபாட்டையும் கண்ட தாயர் கட்டுவிச்சியின் குறியால் இவை தெய்வத்தினாலாயிற்று என்று துணிந்து வேறியாடலினால் இதை உறுதி செய்ய வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வர். தோழி அறத்தொடு நின்றோ வேறு வழிகளை மேற்கொண்டோ இதனை நிறைவேற்றவிடாமல் தடுக்க முயல்வாள். இதுவே வெறி விக்கு என்று வழங்கப்பெறும்.