பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* களவு பற்றிய விளக்கம் 5i. பற்றிய அகப்பாடல்கள் பல உள்ளன என்றும், மெய்யுறும் செய்கை இன்றாயின் பகற்குறி இரவுக்குறி முதலான பல துறைகள் பயனிலவாய் ஒழியும் என்றும் அறுதியிட்டுக் காட்டுவர். மெய்யுறு புணர்ச்சிக்குரிய திமித்தங்கள் : தலைவன் பெருமையும் உரனும் உடையவன். பெருமையாவது, பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது அறிவு. இங்ஙனமே, நிறை காவலுக்கு இடையூறு நேருமோ என்ற அச்சமும், பெண்ணியல் பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையை, நெகிழ விடாமையாகிய மடனும் தலைவியின் சிறப்பியல்புகளாகும். இக் குணங்களையுடைய இவ்விருவரும் தம்மைக் காவாது, வேட்கை மீதுாார்ந்த நிலையில் தத்தம் பண்புகளை நெகிழ விடாதல் கூடா மையின், தாம் எதிர்ப்பட்ட முதற் காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சியளவே ஒழுகி, மணந்து கொண்ட பின்னரே கூடுதல் முறையாகும் என்பது தொல் காப்பியனாரின் கருத்து. மெய்யுறு புணர்ச்சி நிகழ்வதற்கு முன்னர் நடைபெறும் சில நிலைகளை அவர், வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கஞ் செப்பல் நானுவரை இறத்தல் நோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு என்றிச் சிறப்புடை மரபினை களவென மொழிப" விதி செய்து காட்டுவர். இங்கு வேட்கை என்பது, ஒருவரை யொருவர் பெறல் வேண்டும் என்னும் உள்ள நிகழ்ச்சி. ஒருதலை உள்ளுதலாவது, இடைவிடாது நினைதல், மெலிதலாவது, உண்ணாமையால் உண்டாகும் உடல் மெலிவு. ஆக்கஞ் செப் பலாவது, யாதானும் ஒர் இடையூறு கேட்ட வழி அதனை ஆக்க மாக நெஞ்சிற்குக் கூறிக்கொள்ளுதல். நானுவரை இறத்தலாவது, ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி அதன்வரையிறத்தல், (நாண் நீங்குதல்). நோக்குவ எல்லாம் அவையே போதல் என்பது, பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாம் தன் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றாரெனத் திரியக் கோடல். மறத்தலாவது, விளையாட்டு முதலியவற்றை மறத்தல். மயக்கமாவது, செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றோடு கூறல். சாக்காடு என்பது, மடலேறுதலும் 8. களவியல் - 9.