பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடந்தலைப்பாடு 57 என்று முன்பு நிகழ்ந்த ஐயம் நீங்கிப் பெரியதொரு மகிழ்ச்சி அடைவாள். ஆயினும், தன் இயற்கைக் குணங்களாகிய நாண் முதலியன அம்மகிழ்ச்சிக் குறிப்பை வெளிப்படுத்தா வகையில் தடுத்து நிற்கும். உடனே தலைவன், இக்கள வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாக, அதனால் இங்ஙனம் வேறுபட்டாலோ?’’ என்றும், அன்றி, களவு வெளிப்படுதலால் இனி மணம் செய்து கொள்ளின் அல்லது, இக் கூட்டத்திற்கு உடம்படாள் கொல்லோ?” என்றும் கருதுவான். உடனே, மெய்தொட்டுப் பயிறல்' என்ற செயலால் அவளை மெய்யுறத் தீண்டிக் குறிப்பறியத் தொடங்குவான். இதன் பின்னர், இயற்கைப் புணர்ச்சியில் கூறியவாறே தலைமகன் தலைமகளைப் புணர்வான். இக்கூட்டம் நிகழ்ந்தபின் பெரிதும் மகிழ்ந்தவனாய்த் தலைவியைப் பிரிதற் கெண்ணி, அவளைத் தேற்றுதற்கு எஞ்ஞான்றும் இனிப் பிரியேன்” எனத் தெய்வத்தோடு சார்த்திச் சூளுரைப்பான். பின்னர், இனி, இவளைக் கூடுவது அரிதாமோ?’ என்றிரங்கி, அச்சோலையை விட்டு நீங்குவான். . தொல்காப்பியர், மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல் இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்." என்று தலைவன் கூற்றாகக் கூறும் எட்டுக் கிளவிகளையும் நச்சினார்க்கினியர் இடந்தலைப் பாட்டில் அடக்குவர். இளம் பூரணர் முதல் ஆறு கிளவிகளை இயற்கைப் புணர்ச்சிக்குரியவை யாகவும், இறுதி இரண்டு கிளவிகளையும் இடத்தலைப்பாட்டிற் குரியவையாகவும் கூறுவர். அன்றியும், பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக்கலங்கலும்’ என்ற இரண்டையும் இடந்தலைப் பாட்டில் சேர்த்துக் கூறுவர். முன் கூறிய ஆறு கிளவிகளையும் முன்னர் விளக்கினோம்." ஏனைய நான்கையும் ஈண்டு விளக்குவோம். சொல்லிய நுகர்ச்சி 1. களவியல்-11. 2. டிெ-11 (அடி-11) 3. இந்நூல்-பக்கம்-(53-54)