பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அகத்திணைக் கொள்கைகள் அடுத்ததாக நிறுத்தி, அது நிகழாதாயின் 6,55ಣಣ பற்றிய இடந்தலைப்பாடேனும் நிகழும் என்னும் கருத்துடன் நூற்பா செய்தார். - எனவே, காமப்புணர்ச்சியின்பின் இடந்தலைப்பாட்டினை நிறுத்திய தொல்காப்பியர் கருத்துப்படி அக்காமப்புணர்ச்சியை அடுத்து இடந்தலைப்பாடே நிகழ்வதாம் என்பதும், காமப் புணர்ச்சியின்பின் பாங்கற் கூட்டத்தை நிறுத்தி அதன் பின்னர் இடந்தலைப் பாட்டினை எடுத்துக் கூறிய இறையனார் கருத்துப் படி காமப்புணர்ச்சியை அடுத்து நிகழும் இடந்தலைப்பாடு பெரும் பான்மையும் பாங்கற்கூட்டத்தினாலேயே நிகழ்வதாம் என்பதும் புலப்படுகின்றன. இவற்றைத் தவிர, தினையளவேனும் வேறு விதமான முரண்பாடு புலப்படாதிருத்தலை உய்த்து உணர்க. எனவே, இருபேராசிரியரின் கருத்துகளும் ஒரு முகமாக அமைந் திருத்தலைக் கண்டு மகிழ்க. மேலும் இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம் என்ற இரண்டு பகுதிகளுடன் ஏதேனும் ஒன்று மடிலுமே தலைவனுக்கு நிகழு மாதலின், இவற்றுள் எது முன்னர் நிகழ்வது எது பின்னர் நிகழ்வது எனும் ஐயப்பாடு நிகழ்வதற்கே இனிச் சிறிதும் இடமே இல்லை என்பதையும் நாம் கருத்தில் இருத்துதல் வேண்டும். இடந்தலைப்பாடு பற்றி மூன்று பாடல்களே சங்க இலக் கியத்தில் காணக்கிடக்கின்றன. நற்றிணையில் ஒரு பாடல்: இது நெய்தல் திணை பற்றியது. முதல் நாள் புணர்ந்த தலைவியைக் கடற்கரையில் காண்கின்றான் தலைவன். அவள் காதற் பெருக்கை உணர்ந்த தலைவன், பாவையைக் கொண்டு ஆய மகளிருடன் ஆடாதும், நெய்தல் மாலையைப் புனையாதும் கடலருகிலுள்ள சோலையில் தனித்து நிற்கும். நங்கையே! நீ யாரோ? கண்டவர் கண்ணைப் பறிக்கும் அழகினையுடயவனே நின்னை வணங்கிக் கேட்கிறேன். கடற்பரப்பின்கண் விரும்பி யுறைகின்ற நீரக மகளோ? அல்லது இருங்கழியருகில் நிலைத்து வாழும் பெண்ணோ அல்லது வேறு யாரோ?' என்று வினவுகின்

றான, 'ஒள்ளிழை மகளிரொடு ஒரையும் ஆடாய் வள்ளிதல் நெய்தல் தொடலையும் புனையாய் விரிபூங் கானல் ஒருசிறை நின்றாய் யாரையோதின் தொழுதனம் வினவு துங்