பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 அகத்திணைக் கொள்கைகள் (மால் வரை-பெரிய மலை; இழிதரும்-வீழும். துரதூய்மையான கல்முகை-பாறைகளின் வெடிப்புகள்: ததும்பும்-ஒலிக்கும்; சிறு குடி.சிற்றுார் நீர் ஒரன்ன நீரைப் போன்ற சாயல்-மென்மை; தி ஒரன்ன-தியை ஒத்த உரன்-வலி, அவித்தன்று-கெடச் செய்தது.) இவனும் மலைநாட்டுக் குறமகள் ஒருத்தியின் நீரை யொத்த மென்மை, தீயை யொத்த தன் வலியைக் கெடச் செய்தது என் கின்றான். பெருந்தோட் குறுமகள் என்றது, தன் உரன் அவிதற்கு அவள் தோளும் காரணமாயது என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றது. குறுமகள் என்றது, பெருந் தலைமையை யுடைய தன் உரன் அவியச் செய்தாள் என்னும் வியப்புத் தோன்ற. ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன் தான் கண்ட தலைவியின் இயல்பை இவ்வாறு கூறுவான்: குன்றக் குறவன் காதன் மடமகள் வரையற மகளிர்ப் புரையும் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே" (மடமகள் - இளையோள், புரையும் - ஒத்த ஐ-அழகு ஐயள் - அழகினையுடையவள்: செய்ய - சிவந்த; சுணங்கு- தேமல்) இதில் அரும்பிய முலையள், செய்ய வாயினள் சுணங்கு மார் பினள் என்னும் அடையாளங்களால் தனக்கும் அவட்கும் கூட்ட முண்மையைக் குறிப்பாக உணர்த்துவதைக் கண்டு மகிழ்க. இத்தகைய நிகழ்ச்சிகள் தொல்காப்பியரின், 'குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்' என்ற விதியினால் பெறப்படும். இதற்கு இளம்பூரணர் தரும் விளக்கமும் ஈண்டு உளங்கொள்ளத் தக்கது. குற்றங் காட்டிய வாயிலாவது-தலைமகன் மாட்டுச் சோர்வானும் காதல் மிகுதி யானும் நேர்வுற்ற பழி பாவங்களை எடுத்துக்காட்டும் பாங்கன். பெட்பினும்-அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப் பால் வழியது என எண்ணி இவ்வாறு தலைமகன் மறுத்த வழி அதற்கு ஐங்குறு-255 காவியல்.11 -