பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற் கூட்டம் - 69 உடன்படல். அவ்வழி, நின்னாற் காணப் பட்டாள் எவ்விடத்தள்? எத்தன்மையள்? எனப் பாங்கன் வினாவுதலும், அதற்குத் தலை மகள் இடமும் உருவும் கூறுதலும், அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும், மீண்டு தலைமகற்கு அவள் நிலைமை கூறலும் எல்லாம் உளவாம். அவ்வழிப் பாங்கன் வினாதலும் தலைமகன் உரைத்தனவும் உளவாம்' என்பது காண்க. இங்ங்ணம் எல்லாம் தலைவன் கூறியதைக் கேட்ட பாங்கன் தன் அன்பனான தலைவனிடம், தீயன கண்டால் அன்பில் தலைப் பிரியாத சொற்களால் இடித்துக் கூறுபவனாதலின், இஃது இவன் தலைமைப்பாட்டிற்குச் சிறிதும் தகாது’ என்று உட்கொண்டு அன்பனே, நின்உள்ளம் நின்வரைத்தன்றிக் கைமிக்கோடுமே எனின், பின்பு நின்னைத் தெளிவிப்பவர் யாவர்? இப்பெற்றித் தாய நீ, இன்ன விடத்து இன்ன உருக்கண்டு என் உள்ளம் அழியப் போந்தேன் என்றல் நின் கற்பனைக்குப் போதாது” என்று கழறி யுரைப்பான். 'சூழ்பொழில்வாய் எய்கின்ற ஆயத் திடையோர் இளங்கொடி கண்டெனுள்ளம் தேய்கின்ற தென்பது அழகிய - தொன்றோ சிலம்பனுக்கே' (சிலம்பன்-மலை நாட்டுத் தலைவன்) என்ற பாடற் பகுதியால் இதனை அறியலாம். காதற் பாங்கன் இங்ஙனம் கழறவும் கேளாது பின்னும் வேட்கை வயத்தனாய் நிற்கும் தலைவன் நண்ப, என்னாற் காணப்பட்ட வடிவை நீ கண்டிலை: கண்டனையாயின் இங்ஙனம் கழறாய் என்று மறுத் துரைத்து வருந்தா நிற்பான். இதனை, பூணிற் பொலிகொங்கை யாவியை ஓவியப்பொற் கொழுந்தை காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே." என்ற திருக்கோவைப் பகுதியால் அறியலாம். நற்றிணைத் தலைவன் ஒருவன் இவ்வாறு கூறுவான்: 6. பாண்டிக் கோவை-28 (இறை. கா.-3) 7, திருக்கோவை-231