பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 அண்ணல் அநுமன்

'மகவு கொண்டுபோய் மரம்புகு

மந்தியை நிகர்த்தான் " விட்ணுவின் அமிசமாதலால் இயற்கையில் பாரமாயிருக்கின்ற இளைய பெருமாள் தன்னிடத்து நண்பும் பக்தியும் உடையவ னாதலால் அநுமனுக்கு இலேசாகின்றான். 'இராவணன் ஸ்பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்கவிடத்தில் நெஞ்சில் சாத்ரவத்தாலே (பகைமையாலே) எடுக்கமாட்டிற்றிலன்; திருவடி தனியனாக இருக்கச் செய்தேயும் நெஞ்சிற் செவ்வையாலே முகைமாலை போலே எடுத்தேறிட்டுக் கொண்டு போனான்; இங்ங்னன்றாகில் இராவணனுக்குக் கனக்க வேண்டும் என்றும், திருவடிக்கு நொய்தாக வேணுமென்றும் அன்று வஸ்து ஸ்வபவம் இருக்கும்படியா யிற்று இது" என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்திருத்தல் காணத்தக்கது.

(4 போரில் இராமன், இலக்குவன் ஆகியவர்கட்கு அநுமன் வாகனமாக அமைதல் : (அ) முதற்போரில் இராமனை நடந்து செல்லுவதைத் தவிர்த்துத் தன்னை வாகனமாக்கிக் கொள்ளுமாறு வேண்ட அதற்கு இராமனும் ஒருப்படு கின்றான்.

"நூறு பத்துடை நொறில்பரித்

தேரின்மேல் உன்முன் மாறில் போர்.அரக் கன்பொர நிலத்துநீ மலைதல் வேறு காட்டுமோர் வெறுமையை

மெல்லியன் எனினும் ஏறு நீஐய! என்னுடைத்

தோளின்மேல் என்றான்." (நூறுபத்து - ஆயிரம்; மாறில் போர் - மாறில்லாத போர்; பொர - போர் செய்ய, மலைதல் - போரிடல்; ஒர் வெறுமை - ஒப்பற்ற எளிமை; மெல்லியன் - மெலியவன்)

57. யுத்த முதற்போர் - 213 58. யுத்த முதற்போர் - 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/101&oldid=1360819" இலிருந்து மீள்விக்கப்பட்டது