பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஞ்சா நெஞ்சன் 109

புடைக்க, அதனால் தேவாந்தகனுடைய நெடுந்தேர் அழிந்து சாரதியும் மாள்கின்றான்; அதனால் வானவர், முகம் மலர்ச்சி பெறுகின்றனர் (170). தேவாந்தகன் ஒரு சூலப்படையை ஏந்துவதற்கு முயன்றபோது அவனைக் கண் இமைப்பதற்கு முன் தொடர்ந்து பொருகின்றான் மாருதி; தேவாந்தகனும் எதிர்த்துப் பொருகின்றான்; மாருதி தன் கையினால் தேவாந்தகனுடைய கதுப்பின் மூலப்பாகத்தில் புடைத்துச் சிரத்தை மடித்து உயிரைப் போக்குகின்றான்.

(5 அதிகாயன் தலையீடு : தேவாந்தகன் மரித்ததை நேரில் கண்ணால் கண்ட அதிகாயன் அநுமனுடன் நேரே பொர வருகின்றான்; அதனை அநுமனும் காண்கின்றான்’ வந்தவன், "ஏ குரங்கே, முன்பு என் தம்பி அட்சயகுமாரனை நிலத்தில் தேய்த்தாய் ஒப்பற்ற வலிமையால் கடலைத் தாவிச் சென்று உயிர் பிழைத்தாய்; இப்போது அரக்கர் கடலில் புகுந்து வலிமை பொருந்திய தேவாந்தகனை மடித்தாய் அதனைக் கண்டு உன் எதிரில் வந்துள்ளேன். இன்று உனக்கு முடிவு நெருங்கிவிட்டது (174). இன்று உன்னைக் கொன்றால் அல்லது உன்னை இனி வரும் நெடுநாளில் ஒருநாளிலும் உன்னை எதிர்க்கமாட்டேன்; நீ செய்த தீங்குகள் பல; ஆதலால், என்னுடைய கணைமாரியால் இலக்குவனையும் நின்னையும் கொன்றல்லது மீளேன். இதனை மனத்தில் உறுதியாகக் கொள்” என்று வீரவாதம் செய்கின்றான்."

இதனைச் செவிமடுத்த மாருதி,

"பிழையாது.இது பிழையாது.இது எனப்

பெருங்கைத்தலம் பிணையா மழையாம்எனச் சிரித்தான்வட

மலையாம்எனும் நிலையான்”

என்று கூறி,

84. யுத்த. அதிகாயன் வதை - 153 85. யுத்த அதிகாயன் வதை - 174 - 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/110&oldid=1361258" இலிருந்து மீள்விக்கப்பட்டது