பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 அண்ணல் அநுமன்

கொன்றுவிடுகின்றான். உடனே அந்த அரக்கன் வில்லை எறிந்துவிட்டுத் தேரினின்றும் இழிந்து, ஒரு தண்டாயுதத்தால் இடபனைத் தாக்கி அவனை மரண வேதனையடையும்படி செய்துவிடுகின்றான். இந்நிலையில் ஒரு சஞ்சீவி போல் அவண் தோன்றுகின்றான், அநுமன். அரக்கன் அதுமனைத் தண்டாயுதத்தால் மார்பில் அடிக்கின்றான். அநுமன் அவனை இடக்கையினால் பற்றிக்கொண்டு, அவனது தண்டாயுதத்தைப் பறித்தெறிந்துவிட்டு, மற்றொரு கையால் பலமாகக் குத்தி அவனை முடித்துவிடுகின்றான்."

(9) இந்திரசித்து நான்முகன் கணையை ஏவி, இலக்குவனையும் வானரர்களையும் உயிரொடுங்கச் செய்வதற்குமுன் அநுமன் தண்டாயுதம் கொண்டு போர் செய்கின்றான். தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு எங்கும் திரியும்போது மேருமலையை யொக்கின்றான்; திக்கஜத்தை நிகர்க்கின்றான்; தன்னை வளைத்துக்கொண்டு வரும் இராக்கத வீரர்களையெல்லாம் கொன்றொழிக்கின்றான்.”

(10) இந்நிலையில் அகம்பன்" என்ற இராக்கத வீரன் எதிர்ப்படுகின்றான்; இந்திரன் முதல் எவராலும் இக்குரங்கை வெல்ல முடியாது என்று கருதுகின்றான்; பெருஞ்சேனை யுடன் வருகின்றான். அவனுடன் வந்த அரக்கர்கள் விடுத்த எல்லா வித ஆயுதங்களையும் தண்டாயுதத்துடன் சுற்றித் திரிந்த அநுமன் அழித்தொழிக்கிறான். அகம்பன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மேரு மலையை யொத்த அநுமன் பத்துக்கோடி யானைகளையும், அந்த எண்ணுடைய குதிரைகளையும் தேர்களையும் அழித்தொழிக்கின்றான்."

அகம்பன் அம்பு தொடுத்து அநுமன்மீது செல்ல, அநுமனும் தண்டாயுதத்தைச் சுழற்றிக்கொண்டு எதிர்த்துச் செல்லுகின்றான். அகம்பன் அம்புமாரிகளை அநுமன்மீது

96. யுத்த படைத்தலைவர் வதை - 89 - 92.

97. யுத்த. பிரம்மாத்திரப். - 113 - 120.

98. யுத்த பிரம்மாத்திரப். - 122. இராவணனின் படைத் தலைவர்களுள் ஒருவன்.

99. யுத்த பிரம்மாதிரப். - 126 - 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/113&oldid=1361265" இலிருந்து மீள்விக்கப்பட்டது