பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராம தூதன் 115

"அல்லியங் கமலமே

அனைய செங்கண்ஒர் வில்லிதன் தூதன்யான்' என்று தன்னை இராமதுரதன் என்றும்,

பின்னர்,

"அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அநுமன் என்பேன்; நன்னுதல் தன்னைத் தேடி

நாற்பெரும் திசையில் போந்த மன்னரில் தென்பால் வந்த

தானைக்கு மன்னன் வாலி தன்மகன் அவன்தன் தூதன்

வந்தனென்" என்றும் கூறுவதில் 'தூதனாக அறிமுகம் செய்து கொள்வதாலும், ஒருநிலையில் இராவணன் அதுமனைக் கொல்லச் சொல்ல, அவ்வமயம் அருகிலிருந்த வீடணன் 'துதனைக் கொல்லலாகாது என்று கூறுவதாக வரும்,

"இந்திரன் கருமம் ஆற்றும்

இறைவன்நீ இயம்பு துது வந்தனென் என்ற பின்னும்

கோறியோ மறைகள் வல்லோய்' என்னும் பாடற்பகுதியிலும் அநுமன் தூதன்' என்ற நிலைமையை அடைகின்றான். நாமும் இவற்றை ஏற்று, அதுமனைத் தூதன் என்று ஒப்பி, அவன் தூதனாக ஆற்றிய கடமைகளை ஆராய்கின்றோம்.

(1) வள்ளுவர் பெருமான் ஒரு துரதனுக்கு வேண்டிய தகுதிகளாக உள்ளவற்றை

"அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு" "

. சுந்தர. பிணிவீட்டு - 74 . கந்தர. பிணிவீட்டு - 82 . சுந்தர. பிணிவீட்டு - 110 . சுந்தர பிணிவிட்டு - 10 . சுந்தர. பிணிவீட்டு - 12 . குறள் - 584 (துளது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/116&oldid=1361271" இலிருந்து மீள்விக்கப்பட்டது