பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராம தூதன் 125

(க) "அழிவின்றி இருக்க வேண்டியதான நாணம் கெடக் குறைதல் இல்லாத நல்ல நினது அரசச் செல்வத்தையும் அழித்துக்கொண்டு, சிறுமைக்குணம் உடையவனாய் நீதிக்குப் புறம்பான பிறன் மனை நயத்தலான சிறுநெறியில் செல்வையோ?"

(க) பெருந்தவசியர்களும், பெருந்தேவர்களும் உன்னை யொழிந்த மற்றையோர் அனைவரும் இராமனை மறந்தவர்களாய் இலர் என்பது உண்மை'

"ஆதலால், பெறுதற்கரிய செல்வங்களையும், பலவகைச் சுற்றத்தினரையும் உயிர்களையும் அழியாதிருக்கப் பெறுமாறு பிராட்டியை இராவணன் இராமனிடம் ஒப்படைத்து விடுவானாக என்று சூரியனது குமாரன் நினக்குச் சொல்லியனுப்பினான்’ என்று இலங்கை வேந்தனை நோக்கி இயம்பினன், அநுமன்.

இவையெல்லாம் செவிடன் காதில் ஊதப்பெற்ற சங்கொலியாயிற்று. இராமனது சரம் தாடகை மார்பில் ஊடுருவிச் சென்றதைக் கம்பன் கல்லாத புல்லர்க்கு நல்லோர் உரைத்த பொருள் எனப் போயிற்று என்று கூறினான். இங்கு அநுமன் உரைத்த உரை கற்றறிந்த மூடனின் ஒருகாதில் புகுந்து மற்றொரு காதில் வெளியேறியது. எல்லாம் அறிந்த எனக்கு இச்சொற்களைக் கூறியது குன்றில் வாழும் ஒரு குரங்கு ஆகும் என்று எண்ணி மாநகை செய்தனன், இலங்கை வேந்தன்.

(6) இராம துரதனாகச் சென்ற அநுமன் பிராட்டி துரதனாகத் திரும்பிய நிலையில் தான் கண்டவற்றை இவ்வாறு கூறுவான் :

இலங்கையினின்றும் திரும்பிய அநுமன் இராமன் மொய்கழல் தொழுதிலன், முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன் கையினன். இந்நிலையில் பிராட்டியிருக்கும் தென் திசையை நோக்கிப் பூமியில் நெடிது வீழ்ந்து வணங்கினன்.

51. சுந்தர. பிணிவீட்டு - 104 52. சுந்தர. பிணிவீட்டு - 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/126&oldid=1361294" இலிருந்து மீள்விக்கப்பட்டது