பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 அண்ணல் அநுமன்

"கண்டனென் கற்பினுக்கு

அணியைக் கண்களால்" "

என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறுகின்றான். அநுமன் வாக்கினாலேயே (கவிதையில்) கூறியுள்ளதை' ஈண்டு என் சொற்களால் கூறுவேன்.

(அ) "உன் சிறந்த மனைவி என்ற தகுதிக்கும், உன்னைப் பெற்ற தசரத சக்கரவர்த்தியின் மருமகள் என்ற சொல்லுக்கும், மிதிலை மன்னன் சனகன் மகள் என்ற தன்மைக்கும், என் தெய்வம் என்னும் பெருமைக்கும் ஏற்பச் சிறப்புச் சேர்க்கும் தன்மையளாக அமைந்துள்ளாள் (59)

(ஆ) "பொன்னையொத்திருக்கும் பொருள் பொன்னைத் தவிர வேறு இல்லை; அது போலத் தன்னை யொத்திருப்பவள் தன்னைத் தவிர வேறு ஒருத்தி இலள் என்று யாவரும் சொல்லும்படி பிராட்டி பொறுமைக் குணத்தில் நிலை நின்றாள். தனக்கு நாயகனாக வாய்த்த உன்னையே யன்றி, நின்னை ஒத்திருப்பவர் வேறெவரும் இலர் என்ற கீர்த்தியை நினக்குக் கொடுத்தாள். என்னை யொப்பவன் என்னைத் தவிர வேறு எவனும் இலன் என்ற பெருமையை எனக்கும் நல்கினாள் அஃதாவது, நான் தூது போய் வந்த செயல் பயன்பட்டு எனக்குப் பெருமை யளித்தற்குக் காரணமாகுமாறு அவள் நிறைகாத்து நின்றாள்:” (60)

(இ) நீ பிறந்த குலமான சூரிய குலம் இனி இராமகுலம் இரகுவமிசம்) என வழங்குவதாயிற்று தான் பிறந்த குலமான ஜனகக்குலம் இனி ஜானகி குலம் என்று வழங்குமாறு செய்தாள். வானரர் குலமாகிய என் குலம் அநுமார்குலம் என்று வழங்குமாறு செய்தாள். அரக்கர் குலத்தைக் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழச்செய்தாள்.” (6)

(ஈ) "வில்லை ஏந்திய வீரர் திலகமே, இலங்கை நகரில் நற்பெரும் தவச்செல்வியை நான் பார்க்கவில்லை. பின்னர் எதனைக் கண்டேன்? உயர்குடிப் பிறத்தல் என்ற ஒரு குணமும்,

53. சுந்தர. திருவடி தொழுத - 58

54. சுந்தர. திருவடி - 59 - 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/127&oldid=1361295" இலிருந்து மீள்விக்கப்பட்டது