பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 அண்ணல் அநுமன்

அரக்கர்களைப் பூண்டோடு அழித்து நினைத்ததை முடிப்பேன். கடல் இவ்வுலகத்தை அழிக்கும்படி பொங்கி வந்தாலும், இவ்வண்டமே உடைந்து ஆகாயத்தில் சென்றாலும்,

"இற்றைநும் அருளும் எங்கோன்

ஏவலும் இரண்டு பாலும் கற்றைவார் சிறைகள் ஆகக்

கலுழனில் கடப்பல்."" (அருள் - ஆசி, எங்கோன் - இராமன்; ஏவல் - கட்டளை, கற்றைவார் சிறைகள் - தொகுதியான நீண்ட சிறகுகள், கலுழன் - கருடன்) என்று கூறுகின்றான். இதனாலும் இராமபக்தி புலனாகின்றது.

தூதனாகக் கடல் கடந்தது முதல் இராமகாதையின் நிறைவுவரையிலும், அநுமனது இராம பக்தி பளிச்சிட்டுக் காட்டும் இடங்கள் பல. அவற்றைக் காட்ட முயல்வேன்.

(அ) அங்காரதாரையைக் கொன்றொழித்த பிறகு, அரக்கர் முதலியோர் தரும் எல்லா வகைத் துன்பங்களையும் இராமநாம உச்சரிப்பே போக்க வல்லது என்று உறுதி கொள்ளுகின்றான்.

"ஏறுவகை யாண்டைய

இராமன்என எல்லாம் மாறும்;அதின் மாறுபிறிது

இல்லென வலித்தான்' (ஏறுவகை கடந்து உய்யும் உபாயம்; மாறும் - நீங்கும்; பிறிது - வேறான, வலித்தான் - உறுதி கொண்டான்)

(ஆ) பிராட்டியிடம் அநுமன் இராமனின் திருமேனி யழகினை வருணிக்குங்கால், அநுமனின் இராமபக்தியைக் காணலாம்." இராமபிரானைக் கண்டது முதல் அவன்

13. கிட்கிந்தை - மயேந்திரப் - 21 - 23

14. சுந்தர கடல்தாவு - 88

15. சுந்தர - உருக்காட்டுப் - 38 - 58. இஃது இராமாநுசர் பிள்ளையுறங்கா வில்லிதாசருக்கு அரங்கனின் திருவடிமுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/137&oldid=1361313" இலிருந்து மீள்விக்கப்பட்டது